- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதியில் இப்படி ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கிறாரா வெற்றிமாறன்... இது...

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதியில் இப்படி ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கிறாரா வெற்றிமாறன்… இது எங்க போய் முடிய போகுதோ தெரியலையே…

- Advertisement -

தனுசை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு தரமான திரைப்படங்களை கொடுத்தவர் வெற்றிமாறன். இதுபோக அட்டக்கத்தி தினேஷ் வைத்து விசாரணை திரைப்படத்தை அவர் இயக்கி வெற்றி பெற்றார். சூர்யாவுடன் அவர் இணைந்து வாடிவாசல் படத்திற்கான பணிகளில் ஈடுபட இருந்த வேலையில், கால்ஷீட் பிரச்சினை காரணமாக விடுதலை படத்தை இயக்க சென்றார்.

 

- Advertisement -

முதலில் மிகச் சிறிய பட்ஜெட்டில் குறுகிய நாட்களில் தான் இந்த படத்தை எடுப்பதற்கு வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார். ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த திரைப்படம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

- Advertisement -

ஆனால் நாட்கள் செல்ல செல்ல படத்தில் தீவிரமாக இறங்கிய வெற்றிமாறன் அதனை இரண்டு பாகமாக எடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்க ஆரம்பித்தார். நகைச்சுவை நடிகர் சூரியை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து, விஜய் சேதுபதிக்கு முதல் பாகத்திற்கான காட்சியை குறைத்து அவர் எடுத்த விடுதலை படம் வழக்கம்போல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

 

மிக முக்கியமாக குமரேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூரி, பலரது பாராட்டுகளையும் சம்பாதித்தார். விஜய் சேதுபதி இரண்டு மூன்று காட்சிகளில் வந்தாலும், அந்தப் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக பொருந்தி அதற்கான தாக்கத்தையும் ஏற்படுத்தி விட்டு சென்றார்.

 

இப்படியான சூழலில் தான் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை நீண்ட நாட்களாக எடுத்து முடித்திருக்கிறார் வெற்றிமாறன். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். அதுபோக, சமுத்திரக்கனி எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

 

இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே படத்தின் காட்சி நான்கு மணி நேரத்திற்கு செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், விடுதலைப் படத்தின் மூன்றாம் பாதத்திற்கான காட்சியையும் வெற்றிமாறன் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

- Advertisement -

சற்று முன்