- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்புவுடன் இப்படி ஒரு கதையைதான் எடுக்க இருக்கிறாரா வெற்றிமாறன்... இயக்குனர் கூறிய முந்தைய வீடியோவை பகிர்ந்து...

சிம்புவுடன் இப்படி ஒரு கதையைதான் எடுக்க இருக்கிறாரா வெற்றிமாறன்… இயக்குனர் கூறிய முந்தைய வீடியோவை பகிர்ந்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்…

- Advertisement -

பத்து தல திரைப்படத்திற்குப் பிறகு சிம்புவிற்கு தக் லைப் வெளியானது. இரண்டு ஆண்டுகளைக் கடந்து அவர் மீண்டும் திரையில் தோன்றிய நிலையில் அந்த திரைப்படம் அவருக்கு பெரிய அளவில் பெயரை வாங்கி கொடுக்கவில்லை. இந்த நிலையில் தனது 49வது திரைப்படத்திற்காக அவர் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் உடன் கைகோர்த்தார். சந்தானம் இதில் இணைவதாக இருந்தது. படத்தின் பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.

ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சில சிக்கல் ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அஸ்வந்த் மாரிமுத்து உடன் அவர் இணைந்திருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பும், இந்த ஆண்டு இறுதியிலேயே தொடங்கும் என்பதால், தனது அடுத்த திரைப்படத்திற்கான இயக்குனரை மாற்றி இருக்கிறார் சிம்பு.

அதன்படி வெற்றிமாறன் கதையில் அவர் இணைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெற்றிமாறன் தனுசுடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்களை கொடுத்தார். இதுபோக விசாரணை விடுதலை படத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கியிருந்தார். இப்படியான சூழலில் சிம்புவுடன் அவர் கைகோர்த்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே வட சென்னை திரைப்படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாகத்தான் இருந்தது. தனுஷிற்கு போய் அங்கிருந்து சிம்புவுக்கு சென்ற நிலையில் மீண்டும் தனுசுக்கே அந்த திரைப்படம் கைக்கு வந்ததாக சினிமா விமர்சகர்கள் கூறியிருந்தனர். இப்படியான சூழலில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காகவே சிம்பு வெற்றிமாறன் சேர்ந்து இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டது.

இதற்கான டெஸ்ட் சூட்டிங் அண்மையில் நடைபெற அதில், இயக்குனர் நெல்சனும் கலந்து கொண்டதாக பேசுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க வெற்றிமாறன் மற்றும் சிம்பு இணையும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது வடசென்னை திரைப்படத்தின் முந்தைய பாகமாக இது எடுக்கப்பட இருக்கிறதாம்.

ஏற்கனவே அமீர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ராஜன் வகையறா என்னும் கான்செப்ட்டை வெற்றிமாறன் எடுத்ததாகவும், அது சிறப்பாக வந்தது என்றும் சந்தோஷ் நாராயணன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது வெப் சீரிஸ்க்காக எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது அதைத்தான் சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ராஜன் வகையறா குறித்து ஏற்கனவே வெற்றிமாறன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்