- Advertisement -
Homeபொழுதுபோக்குநெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியில்… 3 நாட்களில் விடாமுயற்சி படம் உலகளவில், தமிழ்நாட்டில் வசூல் நிலவரம்

நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியில்… 3 நாட்களில் விடாமுயற்சி படம் உலகளவில், தமிழ்நாட்டில் வசூல் நிலவரம்

- Advertisement -

2 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான படம் விடாமுயற்சி. கடந்த 6ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியானது. அஜீத்குமார் திரிஷா ஆரவ் அர்ஜூன் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்துளளார்.

லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் 2 ஆண்டுகள் கழித்து வெளியானது. கடந்த பொங்கலுக்கே எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் 25 நாட்கள் தாமதமாக கடந்த 5ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். ரஜினி விஜய் போல கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு இருக்கின்றனர். தமிழ்நாடு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அஜீத்குமாரும் ஒருவர். அதனால் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது.

ஆனால் படம் எதிர்பார்த்த திருப்தியை ரசிகர்களுக்கு தரவில்லை என்பதோடு இப்படி ஒரு கதையில் படத்தில் அஜீத்குமார் நடித்திருக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு, ஏகேவின் இமேஜை டேமேஜ் செய்யும் ஒரு படத்தை மகிழ் திருமேனி தந்தவிட்டதாகவும் கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

- Advertisement -

பொதுவாக ஹீரோயிசம் நிறைந்த மாஸ் ஹீரோ அஜீத்குமார், இந்த படத்தில் பல காட்சிகளில் மிகவும் கெஞ்சுகிறார், வில்லன்களிடம் அடி வாங்குகிறார். காதல் மனைவி திரிஷா, அஜீத்குமாரை விவாகரத்து செய்துவிட்டு தன் காதலருடன் செல்ல விரும்புகிறார் போன்ற காட்சிகளை பார்க்கும்போது ஒரு நாயகனாக அஜீத்குமாரின் இமேஜ் பெரிய அளவில் இந்த படத்தில் சிதைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

இப்படி நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் விடாமுயற்சி படம் கடந்த 3 நாட்களில் உலகளவில் மொத்தம் 105 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 61 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. ரஜினி விஜய் படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வசூல் என்பது மிக குறைவுதான் என்பதால் ஏகே ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்