- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி கதை திருட்டு விவகாரம், ஓடாத படத்துக்கு தண்டம் கட்டியது லைகா நிறுவனமா? அஜீத்குமாரா? -...

விடாமுயற்சி கதை திருட்டு விவகாரம், ஓடாத படத்துக்கு தண்டம் கட்டியது லைகா நிறுவனமா? அஜீத்குமாரா? – நஷ்ட ஈடாக அதுவும் இத்தனை கோடிகளா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இந்த மாதம் 6ம் தேதி திரைக்கு வந்த படம் விடாமுயற்சி. இந்த படத்தின் டைட்டில் இப்படி வைத்ததால்தான் என்னவோ இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தவும், படப்பிடிப்பை முடிக்கவும், படத்தை திரைக்கு கொண்டு வரவும் விடாமுயற்சியாக பல சோதனைகளை பல தடைகளை இடையூறுகளைபடக்குழு கடந்து வர வேண்டியிருந்தது.

அஜர்பைஜானில் கடந்த 2023ம் ஆண்டில் அக்டோபரில் துவங்கிய படப்பிடிப்பு, கடந்த ஆண்டு 2024ம் ஆண்டில் டிசம்பரில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியுடன்தான் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிகர் அஜீத்குமார் நடித்து முடித்து விட்டார். அந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது.

வழக்கமாக ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தை முடித்துவிட்டு தான் தனது அடுத்த படத்தில் நடிப்பது அஜீத்குமாரின் வழக்கம். ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு சில வாரங்கள், சில மாதங்கள் என அடிக்கடி தடைபட்டதால் ஒரு கட்டத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க சென்றுவிட்டார் அஜீத்குமார். அதன்பிறகு 45 நாட்கள் ஒதுக்கி விடாமுயற்சி படப்பிடிப்பில் பங்கேற்று அவரது காட்சிகளை முழுவதுமாக நடித்து கொடுத்தார்.

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம், இவர்களாக உருவாக்கிய கதையும் அல்ல. ஹாலிவுட் படமாக பிரேக் டவுன் என்ற படத்தில் ஜெராக்ஸ் காப்பியாகும். ஏற்கனவே எடுத்த படத்தை காப்பியடித்து எடுக்க தான் இப்படி ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்து ஏகே ரசிகர்களை மன உளைச்சல் அடைய செய்திருக்கின்றனர்.

மேலும் இந்த ஹாலிவுட் படத்தை காப்பியடித்து எடுக்க முதலிலேயே அந்த படத்தை தயாரித்த பாராமவுன்ட் தயாரிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதுவும் பெறவில்லை. படம் எடுத்து முடிக்கும் வரை காத்திருந்த அந்த தயாரிப்பு நிறுவனம் தங்களது படத்தின் கதையை காப்பியடித்ததற்காக ரூ. 150 கோடி நஷ்ட ஈடு கேட்டது. பிறகு ரூ. 30 கோடி தந்தால் என்ஓசி தருகிறோம் என்றது. இந்த விவகாரத்தால்தான் பொங்கலுக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போனது.

ஒரு கட்டத்தில் ரூ. 10 கோடி முன்பணம், பிராப்பிட் ஷேர் 10 சதவீதம் என்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அது விடாமுயற்சி படத்துக்கு என்ஓசி தர சம்மதித்தது. ஆனால் படம் வெளியாகி மிக மோசமான விமர்சனங்களுடன் பலத்த தோல்வியை நஷ்டத்தை சந்தித்தது. எனினும் பாரமவுண்ட் நிறுவனத்துக்கு ரூ. 17.5 கோடி நஷ்ட ஈடாக தரப்பட்டுள்ளது. இந்த தொகையை படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தந்ததா, அல்லது இந்த கதையை ரெகமென்ட் செய்த நடிகர் அஜீத்குமாரே தன் சம்பளத்தில் இருந்து தந்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை.

சற்று முன்