கங்குவா மற்றும் ரெட்ரோ படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் கருப்பு. இந்த படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷா சுவாசிகா ஷிவதா யோகிபாபு மன்சூர் அலிகான் நட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் வக்கீலாகவும் அய்யனார் சாமியாகவும் 2 கேரக்டர்களில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கருப்பு படம் ஓடிடி தளத்தில் ரிலீஸாக டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் நடக்காததால், தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் கருப்பு படத்தை வருகிற 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பொங்கல் ரிலீஸ் படங்களாக விஜய் நடித்த ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ஆகிய 2 படங்கள் தயாராக இருக்கின்றன. இதில் ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதியன்றும் பராசக்தி ஜனவரி 14ம் தேதியன்றும் ரிலீஸ் ஆக உள்ளன.
இதில் சூர்யா நடித்த கங்குவா படத்தை பராசக்தி படம் வெளியாகும் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் செய்யலாமா, என்ற ஒரு ஆலோசனையில் கருப்பு படக்குழு இருந்து வருகிறது. இதற்கிடையே விஜய் சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு இடையில் வெளியாகும் சூர்யா படத்துக்கு போதிய எண்ணிக்கையில் தியேட்டர்கள், ரசிகர்களின் வரவேற்பு இருக்குமா என்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இதற்கிடையே மற்றொரு சங்கடமும் கருப்பு பட தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கு ஏற்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி நடித்த 25வது படம் ஜப்பான் படத்தை தயாரித்திருந்தார். அப்போது பயங்கர நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற பெங்களூரு தயாரிப்பு நிறுவனத்திடம்தான் ரூ. 45 கோடி கடனாக பெற்று ஜப்பான் படத்தை தயாரித்தார்.
இப்போது விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை தயாரித்திருப்பது அதே கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம்தான். தனக்கு உதவிய கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த ஜனநாயகன் படம் வெளியாகும் போது, அதற்கு போட்டியாக கருப்பு படத்தை ரிலீஸ் செய்யலாமா, என்ற குழப்பத்திலும் சங்கடத்திலும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இருந்து வருகிறார். அதனால் கருப்பு படம் ரிலீஸ் அடுத்த ஆண்டில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்துக்கு தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





