அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.

இதனிடையேதான் லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக ஒரு தகவல் வெளிவந்தது. இதனால் “விடாமுயற்சி” திரைப்படம் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கைமாறவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது அமலாக்கத்துறை சோதனைக்கு இடையேயும் விடாமுயற்சி திரைப்படத்தை கைவிட்டுவிடக்கூடாது என்று லைகா நிறுவனம் உறுதியாக இருக்கிறதாம். ஆதலால் விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியனின் உதவியை லைகா நிறுவனம் நாட உள்ளதாம்.

லைகா நிறுவனத்திற்கும் அன்புச்செழியனுக்கும் இடையே நல்ல நட்பு இருக்கிறதாம். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவை திருப்திகரமாகவே இருக்குமாம். ஆதலால் அன்புச்செழியனின் துணையோடு “விடாமுயற்சி” திரைப்படத்தை தயாரித்துவிடலாம் என்ற யோசனையில் இருக்கிறார்களாம் லைகா நிறுவனம்.
லைகா நிறுவனத்திற்கு சம்பந்தமான வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதால் பணத்தை வெளியே கொண்டு வர முடியவில்லையாம். ஆதலால் அன்புச்செழியனிடம் கடன் வாங்கி “விடாமுயற்சி” புராஜெக்ட்டை தொடங்கிவிடலாம் என்ற யோசனையில் லைகா நிறுவனம் இருக்கிறதாம். இவ்வாறு ஒரு தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

எனினும் “விடாமுயற்சி” திரைப்படத்திற்காக லோகேஷன் பார்க்கும் பணிகளில் மிக தீவிரமாக இறங்கியுள்ளார் மகிழ் திருமேனி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித்திற்கான டெஸ்ட் லுக்கையும் மகிழ் திருமேனி முடித்துவிட்டாராம்.





