- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்துவிட்டு திரையரங்குகளில் ஆடியன்ஸ்கள் செய்த சம்பவம்... மிரட்டி இருக்கிறாரா வெற்றிமாறன்?...

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்துவிட்டு திரையரங்குகளில் ஆடியன்ஸ்கள் செய்த சம்பவம்… மிரட்டி இருக்கிறாரா வெற்றிமாறன்?…

- Advertisement -

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவுடன் வாடிவாசல் திரைப்படத்தை எடுப்பதாக இருந்தது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. படத்தில் இயக்குனர் அமீர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், சூரிக்கும் படத்தில் இடம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு முன்னோட்டமாக, காளையுடன் சூர்யா பயிற்சி செய்யும் வீடியோக்களும் வெளியாகின.

தொடர்ந்து வி எஃப் எக்ஸ் பணிகளுக்காக வெளிநாடு சென்று வந்தார் வெற்றிமாறன். இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ஆரம்பமாகும் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், திடீரென சூரியை வைத்து இயக்கப் போனார் வெற்றிமாறன். நாவலை தழுவி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், சூரி மற்றும் இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஷூட்டிங் நடத்த இருப்பதாகவும், எல்ரெட் நிறுவனம் இதனை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகின. சூர்யா அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இருந்ததால், அந்த இடைவேளையில் வெற்றிமாறன் இந்த படத்தை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென படத்தில் பாரதிராஜாவிற்கு பதில் விஜய் சேதுபதி உள்ளே வந்தார். அடர்ந்த வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்பதால், பாரதிராஜாவின் கதாபாத்திரம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறைந்த பட்ஜெட்டில் குறைவான செலவிலேயே இந்த படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார் வெற்றிமாறன். ஆனால், படத்திற்கான தேவைகளும் அதிகரிக்க, சூரியன் கதாபாத்திரத்தையும் வலுப்படுத்தி காட்ட வேண்டும் என முடிவு செய்த இயக்குனர், படத்திற்கு விடுதலை என பெயரிட்டு அதை இரண்டு பாகங்களாக எடுப்பதாக அறிவித்தார். அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது.

- Advertisement -

இதில் குமரேசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. விஜய் சேதுபதிக்கு முதல் பாகத்தில் பெரிய வேலை இல்லை என்றாலும், இந்தப் பக்கம் சூரி தனது நடிப்பால் ஆச்சரியப்படுத்தி இருந்தார். நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்தது அவரது கதாபாத்திரம். படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் பிரமாதமாக இருக்க, தற்போது அதன் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இதில் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் சூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடைபெற்றது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் உள்ள, ரோட்டார்டாமில் சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை படத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள் திரையிடப்பட்டன. இரண்டாம் பாகம் எடுத்த காட்சிகள் வரை திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது. இதில் வெற்றிமாறன் விஜய் சேதுபதி சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். படம் முடிவடைந்ததும் அனைவரும் திரையரங்குகளில் எழுந்து நின்று சுமார் ஐந்து நிமிடம் விடாமல் கைதட்டி வெற்றிமாறனை பாராட்டினர். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்