- Advertisement -
Homeபொழுதுபோக்குவேற வழியில்லாம தான் சினிமாவுக்கு வந்தேன், சேவை செய்யலாமுன்னு எல்லாம் வரலே… - இயக்குனர் பாலா...

வேற வழியில்லாம தான் சினிமாவுக்கு வந்தேன், சேவை செய்யலாமுன்னு எல்லாம் வரலே… – இயக்குனர் பாலா ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறார். 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் உள்ள அவர், இயக்கிய இதுவரை 8 படங்கள்தான். சேது படம்தான் அவர் இயக்கிய முதல் படம். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த பாலா, சேது படம் மூலமாக இயக்குனரானார்.

சேது படத்தை தொடர்ந்து நந்தா நான் கடவுள் பரதேசி பிதாமகன் அவன் இவன் தாரை தப்பட்டை ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது வணங்கான் படத்தை இயக்கி உள்ளார். இன்று அந்த படம் வெளியாகி உள்ளது. பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்துக்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து இந்த படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

தனது சினிமா பயணம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பாலா கூறியதாவது, ஒரு காலகட்டத்தில் என்னுடைய பழக்கவழக்கங்களால் ரொம்ப உச்சத்துக்கு போய் நிலை தடுமாறிட்டேன். மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஒரு வாரமா தொடர்ந்து தூங்கியிருக்கேன். ஆல்மோஸ்ட் முடிஞ்சுது, அப்படீங்கற சூழ்நிலை வந்துடுச்சு.

வீட்லேயும் அப்படியே நெனைச்சுட்டாங்க. இன்னும் ஒரு வருஷம் தாங்குவான், அதுவரைக்கும் அவன் எப்படி இருக்கானோ அப்படியே இருந்துட்டு போகட்டும்ங்கற முடிவுக்கு அவங்களும் வந்துட்டாங்க. அந்த சூழ்நிலையில் நான் எடுத்த முடிவுதான் சினிமாவுக்கு வரலாம் என்பது. ட்ரை பண்ணிதான் பார்ப்பபோமே, படிப்பும் இல்லே வேற எந்த வேலைக்கும் நாம லாயக்கு இல்லே.

- Advertisement -

அப்போ ஓபன் பீல்டு என்றால் சினிமா தான். வேற எதுவும் தேவையில்லே. உழைப்பு இருந்தால் போதும். சினிமா பார்க்கற அறிவு இருக்கு. போவோம். பாலு மகேந்திராவை பார்ப்போம். அவர்கிட்ட சேர்ந்துக்கலாமுன்னு எனக்கு தோன்றியது.

அவர்கிட்ட ஒரு பவர் இருந்தது. அதுக்காக போராடி 3 வருஷம் அலைஞ்சு அப்புறம் அவர்கிட்ட அசிஸ்டென்டா ஒர்க் பண்ணி பின்னாடி டைரக்டர் ஆனேன். சேவை பண்ணலாமுன்னு சினிமாவுக்கு வரலே, வேற வழியில்லாமல் தான் சினிமாவுக்கு வந்தேன், என்று அந்த நேர்காணலில் இயக்குனர் பாலா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்