- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தை வைத்து படம் இயக்க முடியாமல் போனது ஏன்... முதல்முறையாக நடந்ததை கூறிய இயக்குனர் விக்னேஷ்...

அஜித்தை வைத்து படம் இயக்க முடியாமல் போனது ஏன்… முதல்முறையாக நடந்ததை கூறிய இயக்குனர் விக்னேஷ் சிவன்… அட…ச்செ ஜஸ்ட் மிஸ் ஆகி போச்சே என வருந்தும் ரசிகர்கள்…

- Advertisement -

போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் போகவில்லை. விமர்சன ரீதியாகவும் போடா போடி திரைப்படம் சரிவை சந்தித்தது. இதன்பிறகு, தனுஷின் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்னேஷ் சிவன்.

 

- Advertisement -

பிறகு, நானும் ரவுடிதான் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையை திருப்பி போட்ட திரைப்படம் அதுதான் என்று கூறவேண்டும். விஜய் சேதுபதி நயன்தாரா பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

 

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்தனர். பின்னாளில் அவரையே தனது மனைவியாக்கிக் கொண்டார் விக்னேஷ் சிவன். இது ஒரு பக்கம் இருக்க, அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் அவர் கவனம் செலுத்தி வந்தார். சூர்யாவை வைத்து அவர் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அது விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை.

 

பிறகு மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை அவர் இயக்கினார். சமந்தா நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை. இப்படியான சூழலில் தற்போது, எல் ஐ கே அதாவது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எனும் திரைப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார்.

 

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சீமான் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்கு இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக அவர் அஜித்தை வைத்துதான் படம் இயக்குவதாக இருந்தது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இது குறித்த அறிவிப்பும் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அது கைவிட்டுப் போன சூழலில் இது குறித்து அவர் முதல் முறையாக விளக்கம் அளித்து இருக்கிறார்.

 

மலையாளத்தில் பகத் பாசில் நடித்த ஆவேசம் திரைப்படம் தான் கிட்டத்தட்ட நான் அஜித்குமாருக்கு எழுதிய திரைக்கதை. ஆனால் இது தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை. அவர்கள் இதில் ஒரு கருத்து எதுவும் இல்லை என்று கூறினார்கள். இதுதான் இங்கு பிரச்சனை என்று தெரிவித்திருந்தார். அதே போல் தனது நானும் ரவுடிதான் திரைப்படம் அஜித் குமாருக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர்தான் தன்னைத் தொடர்பு கொண்டு கதை கூற கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

 

- Advertisement -

சற்று முன்