- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது 45 படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கப் போவது… நோ டவுட் - அந்த...

தனது 45 படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடிக்கப் போவது… நோ டவுட் – அந்த மாஸ் இயக்குனர் படத்தில்தான்… பெரிய சம்பவம் தயாராகுது! – உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகரான அறிமுகமான புதிதில் கேமரா முன் சரியாக நிற்க தெரியாமல் நடிக்க தெரியாமல் நடனம் ஆடத் தெரியாமல் டயலாக் பேச தெரியாமல் தடுமாறியவர் சூர்யா என்ற விமர்சனங்கள் பொய்யில்லை. ஆனால் அந்த கடும் விமர்சனங்களை தன் உழைப்பால், திறமையால், நடிப்பால் தவிடுபொடியாக்கி முன்னணி நடிகராக உயர்ந்தவர்தான் சூர்யா என்றால் அது மிகையல்ல.

அமீர் இயக்கிய மௌனம் பேசிய படத்தில் நடிப்பை கற்றுக்கொண் சூர்யா, பாலா இயக்கிய நந்தா படத்தில் ஹீரோவுக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டார். பிறகு காக்க காக்க, கஜினி போன்ற படங்கள் அவரை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு சென்று பிறகு ஏழாம் அறிவு, அயன், சிங்கம், வேல் போன்ற படங்களின் மூலம் முன்னணி நடிகராக சூர்யா உருவானார்.

- Advertisement -

கங்குவா படத்தை படுமோசமாக விமர்சிக்கும் பலரும் படத்தில் கதை இல்லை, திரைக்கதை இல்லை என்றுதான் குறைபட்டு கொண்டார்களே தவிர, சூர்யா நடிப்பை யாரும் குறை சொல்லவில்லை. ஒரு கேரக்டராக அவரது நடிப்பாற்றலை 100 சதவீதம் சூர்யா தந்திருக்கிறார். கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது திரையில் பார்த்தாலே தெரிகிறது. ஆனால் உப்பில்லாத உணவு போல, அவரது நடிப்பு எடுபடாமல் போய்விட்டது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு ஆகிய முக்கிய படங்களில் நடிக்கும் நல்ல வாய்ப்பை சூர்யாவே நிராகரித்து வெளியேறினார். அதே போல் இந்தியில் அவர் நடிக்க வேண்டிய கர்ணா படமும், கங்குவா படத்தின் படுதோல்வி காரணமாக டிராப் செய்யப்பட்டு விட்டது.

- Advertisement -

இந்த சூழலில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய சூர்யா நடித்த 44வது படம், விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு கல்ட் என பெயர் வைக்கப்பட்டதாக தகவல் இருந்தாலும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இப்போது இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா, நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கோவையில் படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது.

இந்த படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். அடுத்த ஆண்டில் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. விடுதலை 2 படம் ரிலீஸூக்கு பிறகு, வாடிவாசல் படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி முடிக்கும் வெற்றிமாறன், வாடிவாசல் ஷூட்டிங்கை மதுரையில் துவங்க இருக்கிறார். இதில் இயக்குனர் அமீரும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் என்பதும் உறுதியான தகவலாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்