- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடங்கப்பா, இது ஒலக நடிப்புடா சாமி, கவுண்டமணி டயலாக்கை ஓவர்டேக் எடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன்...

அடங்கப்பா, இது ஒலக நடிப்புடா சாமி, கவுண்டமணி டயலாக்கை ஓவர்டேக் எடுத்த இயக்குனர் விக்னேஷ் சிவன் – ஏகே விவகாரத்தில் இப்படி அந்தர் பல்டி அடிச்சுட்டாரே?

- Advertisement -

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் கடைசியாக நடித்த படம் துணிவு. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸானது. அதன்பிறகு அஜீத்குமாரின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஏற்கனவே கதை கேட்டிருந்த அஜீத்குமாரும் ஓகே சொல்லி இருந்தார். இதனால் விக்கியின் மனைவி நயன்தாராவும் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தார்.

ஏனெனில் போடா போடி நானும் ரவுடிதான் தானா சேர்ந்த கூட்டம் காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், முன்னணி இயக்குனராக மாறவில்லை. அஜீத்குமார் நடித்த படத்தை இயக்கினால், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக மாறிவிடுவார். பிறகு ரஜினி விஜய் போன்ற ஸ்டார்களை இயக்கும் வாய்ப்பு அமையும் என நயன்தாரா கணக்குப் போட்டிருந்தார்.

- Advertisement -

ஆனால் திடீரென மனம் மாறிய அஜீத்குமார், விக்னேஷ் சிவனை வேண்டாம் என மறுத்துவிட்டு மகிழ்திருமேனியை அழைத்து விடாமுயற்சி படத்தை இயக்க வாய்ப்பளித்தார். இதனால் விக்கி நயன்தாரா இருவரும் அஜீத் மீது கடுமையான கோபம் கொண்டனர். நேற்று விடாமுயற்சி படம் வெளியாகி, நெகடிவ் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை விக்னேஷ் சிவன் செய்திருந்தார்.

அதில் சில நேரங்களில் இந்த விஷயங்கள் எப்படி நடக்கும் என நீங்கள் கவலைப்படுவதை நிறுத்தும்போது அற்புதம் நி்கழும் என்று பதிவிட்டு விடாமுயற்சி படத்தை குத்திக்காட்டுவது போன்ற ஒரு பதிவை செய்திருந்தார். இப்படி விக்னேஷ் சிவன் வன்மத்தை கக்கிவிட்டாரே என ஏகே ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிரான பதிவுகளை இணையத்தில் பரவ விட்டனர்.

- Advertisement -

அதன்பிறகு இப்போது ஜகா வாங்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன், விடாமுயற்சி படம் குறித்து விமர்சித்து இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது,விடாமுயற்சி ஒரு திரில்லர், ஒரு புதிரை தீர்ப்பது போல முதலில் இருந்து கடைசி வரை கவர்ந்திருக்கிறது. ஏகே சாரின் திரை நடிப்பு அவரது மென்மையான தன்மை முழு படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். யதார்த்தம் கலந்த ஆபத்தான ஆக்சன் காட்சி முதல் கடைசி காட்சி எமோஷன் வரை அவர் கதாபாத்திரத்தை மிகவும் நேர்மையாக நடித்திருக்கிறார். அது மிகவும் உண்மையாக இருந்தது.

அனிருத்தின் அற்புதமான இசை நீங்களாக விசில் அடிப்பதை நிறுத்த முடியாது. மேலும் மிகவும் கடினமான நிலப்பரப்பில் கூட காட்சிகளும் நிலைத்தன்மை சீராக இருக்கும் விதமாக கடின உழைப்பை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. படத்தை மிகவும் சிறப்பாக காட்டியதற்காக ஓம் பிரகாஷ் நீரவ் ஆகியோருக்கு நன்றி. உண்மையிலேயே சர்வதேச தரம். திரிஷா ரெஜினா அர்ஜுன் ஆரவ் மற்றும் அனைவரின் நடிப்பும் சிறப்பு. ஒரு பெரிய வெற்றிக்கு பாராட்டுக்கள் என கூறியிருக்கிறார். ஏகே ரசிகர்களின் எதிர்ப்பால், இப்படி ஒரு பதிவை விக்கி செய்திருப்பதால் இது உலக நடிப்புடா சாமி என்றும் கமெண்ட் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்