- Advertisement -
Homeபொழுதுபோக்குஅக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்ட விஜய் 69 படம், விஜயின் இந்த திடீர் மாற்றத்துக்கு அதுதான்...

அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்ட விஜய் 69 படம், விஜயின் இந்த திடீர் மாற்றத்துக்கு அதுதான் காரணமா? – மீண்டும் வெயிட்டிங்கில் எச் வினோத்

- Advertisement -

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வந்த த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில், நடிகர் விஜய் நடிக்க வேண்டிய போர்ஷன் அனைத்துமே முடிந்து விட்டது. இதில் விடுபட்ட சில காட்சிகள் மட்டுமே, தற்போது பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் ஜெயராம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். இந்த படத்தை டைரக்டர் எச் வினோத் டைரக்ட் செய்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு, பட பூஜையுடன் துவங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு துவக்க விழாவை வரும் அக்டோபர் மாதத்துக்கு நடிகர் விஜய் தள்ளி வைத்துள்ளார்.

வருகிற ஜூன் மாதம் 22ம் தேதி விஜயின் 50வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக, ஒரு கட்சியின் தலைவராக, அரசியல்வாதியாக விஜய் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பதால் இதை மிக பிரமாண்டமாக கொண்டாட, தவெக கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி விருது வழங்கும் விழாவையும் நடத்த விஜய் தயாராகி வருகிறார். அதுமட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தவும் விஜய் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்திடம், தனது கட்சி பதிவு உள்ளிட்ட ஆவணங்களை தமிழக வெற்றிக் கழகம் அளித்துள்ள நிலையில், அங்கிருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே, கட்சியின் மாநில மாநாடுக்கான பணிகளை விஜய் துவங்க முடியும். ஆனால் இப்போது தேர்தல் முடிவுக்காக நாடே காத்திருக்கின்ற சூழலில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான், இதுபோன்ற விஷயங்களில் தேர்தல் ஆணையம் கவனித்து அனுமதி அளிக்கும் என்ற நிலை உள்ளது.

அதனால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பதிலை எதிர்பார்த்திருக்கும் விஜய், மாநாடு குறித்து ஆலோசித்து வருகிறார். அதனால் விஜய் 69 படத்தை வருகிற அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளார். ஏற்கனவே கமல் படத்துக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த எச் வினோத், இப்போது விஜய் 69 படத்துக்காக பல மாதங்களாக காத்திருக்கும் அவல நிலையில் தவிக்கிறார். இன்னும் 4 மாதங்கள் அவர் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சற்று முன்