நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகின்றன. 2 தினங்களுக்கு முன் 17ம் தேதி மாலை வெளியான தி கோட் டிரெய்லர் 35 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
அதுமட்டுமின்றி இதுவரை 2024ம் ஆண்டில் வெளியான படங்களில், 1.6 மில்லியன் பார்வையாளர்கள் லைக் கொடுத்தது தி கோட் டிரயெ்லருக்குதான் என்ற புது சாதனையையும் இதில் விஜய் நிகழ்த்தி காட்டியிருக்கிறார். சினிமா தியேட்டர்களில் காட்டப்படும் தி கோட் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
வருகிற 22ம் தேதி, நடிகர் விஜய் பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்த உள்ளார். அதற்கான ஒத்திகை நேற்று பனையூரில் நடந்துள்ளது. மேலும் செப்டம்பர் 22ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் அரசியல் முதல் மாநாடு நடத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது.
இந்த நிகழ்வுகளை தொடர்ந்து நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்தபடி தனது கடைசி படமான விஜய் 69 படத்தில், எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு மகளாக பிரேமலு பட நாயகி மமிதா பைஜூ நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் இன்னும் முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த சூழலில், தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம், வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் எந்த விதமான படப்பிடிப்பு, படம் தயாரிப்பு சார்ந்த பணிகள் நடக்காது என வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். நடிகர்கள் சம்பளம், ஜிம்பாய், மேக்கப்மேன், உதவியாளகர் என அவர்களால் ஏற்படும் கூடுதல் செலவு உள்ளிட்டவை காரணமாக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகர் சங்க நிர்வாகிகள், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில், கண்டிப்பாக வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ஸ்டிரைக் அறிவித்தபடி நடக்கும். அதனால் விஜய் 69 உள்ளிட்ட படங்கள் முன் தயாரிப்பு பணிகளை நிறுத்தச் சொல்லி விடுங்கள் என்று தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாக கூறியிருக்கின்றனர். அதனால் விஜய் 69 படப்பிடிப்பை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தளபதி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.





