தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி பீக்கில் இருந்தபோதே ரவிச்சந்திரன் வெள்ளி விழா நாயகன் என்று கொண்டாடப்பட்டார். அதேபோல் ரஜினிகாந்த், கமல் ஹாசன் பீக்கில் இருந்தபோது நடிகர் மோகன் வெள்ளி விழா நாயகன் என அழைக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அவரை பாலுமகேந்திரான் திரையுலகில் அறிமுகப்படுத்தினார்.
அதனையடுத்து தமிழில் மௌன ராகம், ரெட்டை வால் குருவி, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். அவரது படங்கள் எப்படி ஹிட்டடித்ததோ அதேபோல் அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட்டடித்து ரசிகர்களிடம் அவரை கொண்டுபோய் சேர்த்தது. இப்படி உச்சத்தில் இருந்த மைக் மோகன் ஒருகட்டத்தில் திடீரென காணாமல் போனார்.
தற்போது அவர் மீண்டும் சினிமாவில் என்ட்ரி ஆகியிருக்கிறார். ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கும் அவர் விஜய் நடிக்கும் தளபதி 68ல் முக்கியமான ரோல் ஒன்றை செய்கிறார். இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மோகன் குறித்து பேசுகையில், “வெள்ளி விழா நாயகன் என்று கொண்டாடப்பட்டவர் மைக் மோகன். கமல் ஹாசன் பாணியை பின்பற்றி அவர் நடித்தார். அதுமட்டுமின்றி தன்னுடைய நடிப்பில் வித்தியாசமான ஸ்டைலையும் அவர் காண்பித்தார்.
கமல் ஹாசனுக்கு பிறகு இளம் பெண்களை அதிகம் ஈர்த்த நடிகர் என்றால் அது மோகன். அவர் பாலுமகேந்திரா மூலம் அறிமுகமானாலும் தமிழ் பேச தெரியாது. இருந்தாலும் அவர் பேசுவது போன்றே இருக்கும் அதற்கு காரணம் விஜய்யின் தாய் மாமா. ஆம் சுரேந்தர்தான் மோகனுக்கு பின்னணி குரல் கொடுத்தவர். அவரது குரல் அப்படியே மோகனுக்கு பொருந்திப்போனது.
எந்தவித சர்ச்சையிலும் சிக்காத மோகன் கிசுகிசுவில் சிக்குபவர். ஏனென்றால் அவர் எந்த ஹீரோயினுடனும் சேர்ந்து நடித்தால் அவர்களுக்குள் இருக்கும் கெமிஸ்ட்ரி அப்படியே பற்றிக்கொள்ளும். அரசியல் கட்சிகள் பல அவருக்கு தூது விட்டன. லட்சங்களில் பேரம் பேசினார்கள். மோகனோ திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மோகனின் மார்க்கெட் சரிந்த காலத்தில் அவருக்கும் சுரேந்தருக்கும் முட்டிக்கொண்டது.
அவர் தீடிரென ஆள் காணாமல் போனவுடன் அவருக்கு எய்ட்ஸ் வந்துவிட்டது என்று கிளப்பிவிட்டார்கள். சில காலம் அதற்கு அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தொடர்ந்து அப்படியே பேசப்பட்டதால் ஒருகட்டத்தில் அவர் தனக்கு எய்ட்ஸ் எல்லாம் இல்லை என்று விளக்கம் அளித்தார். தன்னுடைய குடும்பத்தையும் எந்த காலத்திலும் மீடியாவில் காட்டாதவர் அவர். இப்போதுவரை காண்பிக்கவில்லை” என்றார்.





