- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது அடுத்த திரைப்படத்திற்கும் குறி வைத்திருக்கிறாரா தளபதி விஜய்... ஓ!... அப்படி என்றால் இது பிளான்...

என்னது அடுத்த திரைப்படத்திற்கும் குறி வைத்திருக்கிறாரா தளபதி விஜய்… ஓ!… அப்படி என்றால் இது பிளான் B யா… என்ன சொல்கிறது கோலிவுட் வட்டாரம்…

- Advertisement -

தளபதி விஜய் தற்போது அரசியல் ஒரு பக்கம் சினிமா ஒரு பக்கம் என இரண்டு பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்ததில் இருந்து அவர் அரசியல் கவனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அண்மையில் தனது முதல் அரசியல் மாநாட்டை அவர் நடத்தினார்.

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே தனது இலக்கு என்றும் அவர் கூறி வருகிறார். அதேசமயம் தனது கடைசி திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். ஹெச் வினோத் இயக்கும் இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பையனூரில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

வெளியிடங்களுக்கு சூட்டிங் செல்ல வேண்டாம் என விஜய் கூறியிருப்பதாகவும் இதன் காரணமாகவே முழுக்க முழுக்க பையனூரிலேயே படப்பிடிப்பு நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, கௌதம் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகிறார்கள்.

ஏப்ரல் மாதம் இந்த திரைப்படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதன் பிறகு அரசியலில் அதிக கவனத்தை விஜய் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் அவர் மீது கடுமையான விமர்சனங்களும் இருந்து வருகின்றன. எந்த ஒரு இடத்திற்கும் களத்திற்கு செல்லாமல் வெறும் இணையத்தில் மட்டுமே அவர் கட்சியை நடத்தி வருவதாக பலர் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

அதேபோல் விஜய் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்றும் பலர் கூறி வருகின்றனர். அண்மையில் கூட ஆளுநரை சந்தித்து மனு அளித்த விஜய், அங்கு வாசலில் காத்திருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கவில்லை. பெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கும், பனையூரில் அழைத்து தான் நிவாரணத்தை வழங்கினார் விஜய். இப்படி ஒரு சூழலில் அவர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மிகவும் குறுகிய காலத்தில் இந்த திரைப்படத்தை முடிக்க அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான கதையை வெங்கட் பிரபுவிடம் அவர் ஒப்படைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ளதாகவும், இப்படி ஒரு சமயத்தில் விஜய் இன்னொரு படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்