- Advertisement -
Homeபொழுதுபோக்குபண்டிகை காலங்களில் நேரடியாக மோதும் விஜய், அஜீத் படங்கள் - அந்த விஷப்பரீட்சை இனி வேண்டாம்...

பண்டிகை காலங்களில் நேரடியாக மோதும் விஜய், அஜீத் படங்கள் – அந்த விஷப்பரீட்சை இனி வேண்டாம் என தெறித்து ஓடும் தியேட்டர் உரிமையாளர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ரிலீஸாவது நீண்டகாலமாகவே வழக்கமாக இருக்கிறது. எம்ஜிஆர் சிவாஜி காலம் துவங்கி, ரஜினி கமல் படங்கள், இன்று விஜய் அஜீத் படங்கள் வரை அது தொடர்கதையாகவே இருக்கிறது.

பொதுவாக பெஸ்டிவல் பிலிம்ஸ் எனப்படும் பண்டிகை கால படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொடர்விடுமுறை, குடும்பமாக தியேட்டர்களுக்கு வரும் ரசிகர் கூட்டம் கணிசமான லாபத்தை தருவதால் தீபாவளி, பொங்கலுக்கு அதிக படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது ஒரு நடைமுறையாக இருந்தது.

- Advertisement -

வாரத்தில் ஒருநாள் அசைவம் என்ற நிலை மாறி, எப்போது வேண்டுமானாலும் அசைவம் சாப்பிடும் பழக்கத்துக்கு இன்றைய மக்கள் மாறிவிட்டனர். அப்படி, தமிழ் சினிமாவில் எப்போது நல்ல படம் வந்தாலும் தியேட்டர்களுக்கு வருவதும் ரசிகர்களின் வழக்கமாகி விட்டது. அதனால் நல்ல படங்கள் எப்போது வந்தாலும் ரசிகர்கள் பார்த்து வெற்றி பெறச் செய்வார்கள். பண்டிகை காலம் என்பது அவசியமில்லை.

இந்த 2023ம் ஆண்டில் பொங்கல் ரிலீஸ் ஆக வெளிவந்த படம் அஜீத் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு. இதற்கு முன்பு இதே போல் பண்டிகை கால படங்களாக போக்கிரி ஆழ்வார், ஜில்லா வீரம் படங்கள் மோதியிருக்கின்றன. இப்போது விஜய் 68 படம், விடாமுயற்சி படங்களும் இதே போல் மோதுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்க்கவே செய்கின்றனர்.

- Advertisement -

அஜீத், விஜய் படங்கள் ஒன்றாக ரிலீஸானால், ரசிகர்களால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. டிக்கெட் கலெக்சனும் 2ஆக பிரிந்துவிடுகிறது. இதனால் லாபம் வெகுவாக குறைகிறது. இதுவே தனித்தனியாக அவர்கள் படம் ரிலீஸானால் இந்த பிரச்னைகள் இல்லை. எனவே இருவரது படங்களும் தனித்தனியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

இப்போது தயாராகி வரும் விஜய், அஜீத் படங்களும் அதுபோல் பண்டிகை கால படங்களாக வெளியாகுமா, என்ற ஒரு எதிர்பார்ப்பு இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் காணப்படுகிறது. ஆனால் இந்தமுறை அந்த விஷப்பரீட்சை வேண்டும் என விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். அதனால் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படம், விஜய் பிறந்த நாளான ஜூன் 22ல், அஜீத் நடித்த விடாமுயற்சி படம், அஜீத் பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்