- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது மறைவுக்கு முன்பே அந்த விஷயங்களை கச்சிதமாக செய்து முடித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா -...

தனது மறைவுக்கு முன்பே அந்த விஷயங்களை கச்சிதமாக செய்து முடித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா – உண்மைகளை சொன்ன பிரபலம்!

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தில் சொத்து தகராறு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. பாரதிராஜாவின் மகன் மனோஜூக்கு ஒதுக்கப்பட்ட சொத்துக்கள் மனோஜின் மனைவி நந்தனா மற்றும் பிள்ளைகளுக்கு சேர வேண்டிய நிலையில், பாரதிராஜாவின் மகள் ஜனனி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் பாரதிராஜா குறித்த பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மனோஜ்குமார் கூறியதாவது, பாரதிராஜா பற்றி வெளியில் பேசுவது போல் 1000 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்தவர் அல்ல. அதே நேரத்தில் அவரிடம் ஒன்றுமே இல்லை என்பதும் உண்மை இல்லை. அவருக்கு சொத்துக்கள் இருந்தன. ஆனால் அந்த சொத்துகளுக்கு நடுவே கடன்களும் இருந்தன.மனோஜை நடிகராகவும் பிறகு இயக்குனராகவும் கொண்டு வர பாரதிராஜா மிகப்பெரிய அளவில் முயற்சி செய்தார். தாஜ்மஹால் அல்லி அர்ஜூனா போன்ற படங்களில் பாரதிராஜா மிகப்பெரிய இழப்பை சந்தித்தார்.

- Advertisement -

மொத்தமாக 15 கோடி ரூபாய் வரை அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி மனோஜை இயக்குனராக்கும் ஆசையிலும் மீண்டும் பாரதிராஜா முதலீடு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் மனோஜ் இயக்கும் ஒரு படத்துக்காக ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக பணம் போடப்பட்டுள்ளது. ஆனால் அந்த முயற்சியும் எதிர்பார்த்தபடி போகவில்லை.ஒரு அப்பாவாக பாரதிராஜா தன் மகன் மனோஜூக்காக எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. அதுவே பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய மன வேதனையாக இருந்தது. படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க பாரதிராஜா பல இடங்களில் கடன் வாங்கினார்.

அதில் ஐடிபிஐ வங்கி எல்ஐசி போன்ற இடங்களில் வாங்கிய கடன்களும் இருந்தது. வெளியிலும் சிலரிடம் பாரதிராஜா பணம் வாங்கியிருக்கிறார். இந்த கடன்களை அடைக்கவே தேனியில் பள்ளிக்கூடம் கட்ட நினைத்து வைத்திருந்த ஒரு பெரிய இடத்தை விற்று ஒரு பகுதி கடனை அடைத்தார். அதற்கு பிறகு நீலாங்கரையில் உள்ள வீட்டின் பின்னால் இருந்த 9 கிரவுண்ட் காலி இடத்தையும் விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு அட்வான்ஸாக சுமார் 4 கோடி ரூபாய் அவர் வாங்கியதாகவும் மீதமிருந்த தொகையை வாங்கி கடனை முழுமையாக அடைக்க திட்டமிட்டு இருந்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அந்த வேலை முழுமையாக முடியும் முன்பே மகன் மனோஜ் மறைந்து விட்டார். அதன்பிறகு அந்த சொத்து விற்பனை ஆவணங்கள் நடவடிக்கை எல்லாமே பாதியில் நின்று விட்டது. பாரதிராஜாவின் சொத்து கடன் ஒப்பந்தம் தொடர்பான பல முக்கிய ஆவணங்களையும் கடைசி காலத்தில் மனோஜ் தான் கவனித்துக் கொண்டிருந்தார். வரவு செலவு விபரங்கள் விற்பனை ஒப்பந்தங்கள் கடன் தொடர்பான டாக்குமென்ட்கள் எல்லாமே மனோஜ் வசமே இருந்தன. மனோஜ் மறைவுக்கு பிறகு அவரது மனைவி நந்தனாவிடம் இருந்துள்ளது.

பாரதிராஜா உயிரோடு இருந்தபோதே மகன் மனோஜூக்கும் மகள் ஜனனிக்கும் தனித்தனியாக சொத்துக்களை எழுதி வைத்திருந்தார். தி நகரில் ஒரு வீடு விருகம்பாக்கம் தேனாம்பேட்டை பகுதியில் ஒரு கட்டிடம், ஜெமினி பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட் இவை மனோஜ் பெயரில் இருந்தன. அதேபோல் ஜனனி பெயரில் நீலாங்கரையில் ஒரு வீடு தேனியில் ஒரு வீடு ஆரிங்டன் ரோட்டில் ஒரு அப்பார்ட்மெண்ட் எழுதப்பட்டது. இப்படி முன்பே சொத்துக்கள் ஒதுக்கப்பட்டது. பாரதிராஜா இறந்த பிறகுதான் சொத்து பங்கு குறித்து குடும்பம் சண்டை போட்டது என்பது தவறான தகவல். பிள்ளைகளுக்கான அடிப்படை சொத்து ஒதுக்கீட்டை பாரதிராஜா முன்பே செய்துவிட்டார் என்று இயக்குனர் மனோஜ் குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்