- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு நெஞ்சே வலிக்குது.. விஜய் ஆண்டனி மகள் குறித்து வீட்டு பணி பெண் கண்ணீர் பேட்டி

எனக்கு நெஞ்சே வலிக்குது.. விஜய் ஆண்டனி மகள் குறித்து வீட்டு பணி பெண் கண்ணீர் பேட்டி

- Advertisement -

தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனிக்கு லாரா, மீரா என்ற இரு மகள் இருந்தனர். இவர்களில் மீரா தனியா பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். படிப்பிலும் மற்ற செயல்களிலும் படு ஆக்டிவ்வாக இருந்த அவர் கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதற்கான சிகிச்சையையும் அவர் எடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்த சூழலில் இன்று அதிகாலை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த இறுதிச்சடங்கு நாளை காலை நடக்கவிருக்கிறது. டிடிகே சாலையில் இருக்கும் விஜய் ஆண்டனி வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மீராவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் விஜய் ஆண்டனி வீட்டில் மூன்று மாதங்கள் பணியாற்றிய பெண் ஒருவர் மீரா குறித்து பேசுகையில், “நான் விஜய் ஆண்டனி சார் வீட்டில் மூன்று மாதங்கள் சமையற்காரராக வேலை செய்தேன். அவரது மகள் மீரா ரொம்ப நல்ல பொண்ணு. நாந்தான் அவருக்கு தினமும் சமைத்து டிஃபன் பாக்ஸில் போட்டு கொடுப்பேன். அவ்வளவு பாசமாக இருப்பார். அவர் மட்டுமில்லாமல் அந்த குடும்பமே பாசமாகத்தான் இருக்கும்.

அந்தப் பொண்ணு அவ்வளவு அமைதியாக இருக்கும். வீட்டில் மீரா இருக்குதா இல்லையா என்றுகூட தெரியாது. யாருக்கும் அந்த பொண்ணால் சின்ன தொந்தரவுகூட வந்தது கிடையாது. எதாவது வேண்டுமானு கேட்டாக்கூட இல்ல நானே எடுத்துக்குறேனு சொல்லும். மைக்ரோ ஓவன்ல சாப்பாட சூடுபண்ணி தரேனுகூட சொன்னாக்கூட இல்லை நானே செய்துக்கிறேனு சொல்லி செஞ்சிக்கும். டீயோ காபியோ அதில் ஏதாவது வேண்டுமெனால் மட்டும்தான் என்னிடம் கேட்கும்.

- Advertisement -

மீராவுக்கு தயிர் சாதம்னா உயிர். தயிர் இருந்தா அதுக்கு போதும். அதோட பிறந்தநாள் அன்னைக்கு விஜய் ஆண்டனி சார் வீட்டில் பணி செய்யும் எங்கள் எல்லோரையும் அழைத்தார். நாங்களும் போனோம். அப்போது என்னிடம் மீரா ஆசீர்வாதம் வாங்கி கேக் கொடுத்துச்சு. அதுக்கா இந்த நிலைமை. அதை நினைக்கும்போது எனது நெஞ்சே வலிக்குது” என்றார்ர்.

- Advertisement -

சற்று முன்