- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்கள் அபார வளர்ச்சிக்கு ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் - தியேட்டரில் நடந்த ரசிகர்கள் வெறியாட்டத்துக்கு...

தங்கள் அபார வளர்ச்சிக்கு ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளும் நடிகர்கள் – தியேட்டரில் நடந்த ரசிகர்கள் வெறியாட்டத்துக்கு வாய் திறந்தாரா விஜய்?

- Advertisement -

சினிமாவை, ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாருங்கள். அந்த படத்தின் கதையை, மைய கருவை வாழ்க்கைக்கு உதவும் பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மன மகிழ்ச்சிக்காகவும், நேரத்தை போக்கவும் மட்டுமே சினிமா பயன்பட வேண்டும் என்றுதான் ஆரம்ப காலகட்டங்களில் ரசிகர்களுக்கு சொல்லப்பட்டது. அதுதான் அன்றைய சினிமா ரசிகர்களின் மன நிலையாகவும் இருந்தது.

ஆனால் காலப் போக்கில் ரஜினி போன்ற சில நடிகர்கள் வந்த பின், ரசிகர்களின் ஆர்ப்பாட்டங்களும், அலப்பரைகளும் அதிகரித்தன. அவர்கள் படம் ரிலீஸ் ஆவதை ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி, தோரணம் கட்டி, பட்டாசு வெடித்து ஒரு திருவிழா போல கொண்டாட துவங்கினர். இதில் இரண்டு தரப்பிலான நடிகர்களின் ரசிகர்களுக்குள் தகராறு, கோஷ்டி மோதல் கூட அவ்வப்போது நடந்தது. இதை எல்லாம் அந்த நடிகர்கள் தடுக்கவும் இல்லை. கண்டிக்கவும் இல்லை.

- Advertisement -

இது படிப்படியாக வளர்ந்து, வளர்ந்து இன்று ஒரு சினிமா தியேட்டரையே சூறையாடும் அளவுக்கு ரசிகர்களின் வெறித்தனம் அதிகமாகி இருக்கிறது. இதுமட்டுமின்றி, டிரெய்லர் பார்க்க தியேட்டருக்கு வந்தவர்களில் பாதி பேர், வேற லெவல், வேற லெவல், வேற லெவல் என கதறியதையும், கூச்சலிட்டதையும் பார்க்கும் போது அவர்களது மனநிலை, உணர்ச்சிக் கொந்தளிப்பு எப்படிபட்டதாக மாறி இருக்கிறது என்பது அதிர்ச்சி தருவதாகவே இருந்தது.

லியோ டிரெய்லர் பார்க்க வந்தவர்களில் ஒரு சிலர், மற்றொரு பெரிய நடிகரை பயங்கரமாக கெட்ட வார்த்தைகளில் திட்டி பேசியதையும் காண முடிந்தது. தங்கள் அபிமான நடிகரை உயர்த்தி பேசி, அவரை தரம் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதன் மூலம் தங்களது எரிச்சலை சில ரசிகர்கள் வெளிப்படுத்தியது மிக அசிங்கமான செயலாகவே இருந்தது.

- Advertisement -

ரோகிணி தியேட்டரில் மூன்று முறை லியோ டிரெய்லர் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. முதல்முறை திரையிட்ட பின் மீண்டும் மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்ட நிலையில், மூன்றுமுறை டிரெய்லர் காட்டப்பட்டுள்ளது. அதற்கு பிறகுதான் தங்களது வெறியாட்டத்தை அங்குள்ள இருக்கைகள், பொருட்கள் மீது காட்டி துவம்சம் செய்திருக்கின்றனர் விஜய் நெஞ்சில் குடியிருக்கும் அந்த அன்பான ரசிகர்கள். இப்படி ஒரு வெறியாட்டத்தை, ஒரு பொது இடத்தில் நிகழ்த்தி காட்டியிருக்கும் இந்த ரசிகர்களை நம்பி, அரசியல் களத்தில் விஜய் குதித்தால், தமிழக மக்களின் நிலை என்னவாகும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

அதே வேளையில், இதுவரை தனது ரசிகர்களின் இத்தகைய மிக தவறான, கேடுகெட்ட செயலுக்காக ஒரு வருத்தம் தெரிவித்து, விஜய் அறிக்கை வெளியிடவில்லை. ரசிகர்களின் தவறான நடத்தைக்காக பொதுவெளியில் ஒரு மன்னிப்பும் கேட்கவில்லை. தியேட்டர் நிர்வாகத்தை அவர் போனில் அழைத்து பேசியதாக கூறப்படும் ஒரு தகவல், எந்தளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை.

மொத்தத்தில் ரஜினி முதல் விஜய் வரை, தங்களது வளர்ச்சிக்கு ரசிகர்களை சிரமமின்றி பயன்படுத்திக் கொள்கின்றனர். ரசிகர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்காமல், கண்டிக்காமல் இருப்பது மறைமுகமாக இதை ஆதரிப்பதாகவே அமையும். கேரளாவில் நடிகர்களை, ரசிகர்கள் இப்படி கொண்டாடுவதில்லை. ஆந்திராவில் இதுபோன்ற ரசிகர்கள் இருந்தாலும், தமிழ்நாட்டை போன்ற உச்சக்கட்ட வெறித்தனம் வேறு எங்கும் இல்லை என்பதே கசப்பான உண்மை.

- Advertisement -

சற்று முன்