- Advertisement -
Homeபொழுதுபோக்கு8 ஆண்டுகளுக்கு முன்பே தளபதி ஓகே சொன்ன கதைதான் விஜய் 69,ஆனால் 3 முக்கிய...

8 ஆண்டுகளுக்கு முன்பே தளபதி ஓகே சொன்ன கதைதான் விஜய் 69,ஆனால் 3 முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார்களே? – அஜீத்குமார் இந்த லிஸ்ட்ல இல்லையா?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 5ம் தேதி வெளிவந்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் 350 கோடி ரூபாய் வசூலை கடந்து கடந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய் வசூலை கடந்த 10 நாட்களில் கடந்துள்ளது. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த படம் தோல்வியை சந்தித்துள்ளது. தெலுங்கில் 13 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் படங்களை பொறுத்தவரை எப்போதுமே வசூலில் சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்து விடும் என்று சொன்னாலும் கூட இந்தி, தெலுங்கில் தி கோட் படம் வெற்றி பெறாதது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

அதே நேரத்தில் விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 69வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் மோகன்லால், நடிகைகள் சிம்ரன் மமீதா பைஜூ கதாநாயகியாக பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

விஜய் 69 படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் விஜய் சம்பளம் மட்டுமே ரூ. 275 கோடி என்று சொல்லப்படுகிறது. படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களையும் இயக்கியவர்.

நேற்று விஜய் அடுத்து நடிக்கும் 69வது படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. தீப்பந்தம் பிடித்தபடி இருக்கும் அந்த போஸ்டர் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது விஜய் 69 படத்தின் கதை குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படம் இல்லை என்றாலும், அரசியல் சார்ந்த சில விஷயங்கள் இந்த படத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே 2017ம் ஆண்டில் மெர்சல் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவரை சந்தித்த டைரக்டர் வினோத் விஜய் 69 படத்தின் கதையை கூறியிருக்கிறார். அப்போதே கதை பிடித்துப்போய் ஓகே சொன்ன நடிகர் விஜய், அப்போதைய சூழ்நிலையில் அந்த படத்தில் உடனடியாக நடிக்க முடியவில்லை. பிறகு இந்த கதையை நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ், கமல் ஆகியோரிடம் எச் வினோத் கூறியிருக்கிறார். மூன்று பேருமே இந்த கதையில் நடிக்க சம்மதிக்காத நிலையில், மீண்டும் 8 ஆண்டுகளுக்கு பிறகு அதே கதையை விஜய்யிடம் சொல்ல விஜய் ஓகே சொல்லிவிட்டார். அரசியல் கலந்த படமாக இருப்பதால் இந்த கதையை எச் வினோத், அஜித்குமாரிடம் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

சற்று முன்