- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனது பெயரில் ரசிகர் மன்றங்கள், சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் - எச்சரிக்கை விடுத்த முதல்வர்...

எனது பெயரில் ரசிகர் மன்றங்கள், சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் – எச்சரிக்கை விடுத்த முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்!

- Advertisement -

இயக்குனர் ஜேசன் சஞ்சய் முதல்வர் விஜய் மகன் என்பதால் அவரது பெயரில் அங்கீகாரமற்ற ரசிகர் மன்றங்கள் அதிகமாக உருவாகி உள்ளது அதன் மூலம் சிலர் ஆதாயம் தேடவும் முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, என்னுடைய அதிகாரபூர்வமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடக கணக்குகளை முறைப்படி அறிவிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன். அதிகாரபூர்வ கணக்குகள் மட்டுமே என்னால் நிர்வகிக்கப்படும். அது தவிர பிற டிஜிட்டல் தளங்களில் என் பெயர் புகைப்படம் அல்லது எனது அடையாளத்தை பயன்படுத்தி இயங்கும் மற்ற அனைத்து கணக்குகளும் போலியானவை. மேலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றத்தையோ சங்கத்தையோ அல்லது சமூக குழுவையோ நான் அங்கீகரிக்கவில்லை; தொடங்கவும் இல்லை. அதற்கு அனுமதி அளிக்கவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்