- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்திலிருந்து வெளியான புதிய அப்டேட்... தளபதியுடன் மோத ரெடியாக காத்திருக்கும் சிவகார்த்திகேயன்... இது வேற...

ஜனநாயகன் படத்திலிருந்து வெளியான புதிய அப்டேட்… தளபதியுடன் மோத ரெடியாக காத்திருக்கும் சிவகார்த்திகேயன்… இது வேற லெவல்தான் போங்க…

- Advertisement -

அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் விஜய், தனது கடைசி திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். ஹெச் வினோத் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். அரசியல் கலந்த கமர்சியல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக வருகிறார் பூஜா ஹெக்டே.

படத்திற்கு ஜனநாயகன் என தலைப்பு வைத்திருக்கிறார்கள். கன்னட சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற கேவிஎன் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு, மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக அதன் வர்த்தகமும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று பேசப்படுகிறது.

- Advertisement -

டிஜிட்டல் உரிமமும், திரையரங்கு விநியோகஸ்தமும் மிகப்பெரிய தொகைக்கு கை மாற இருப்பதாக சொல்கிறார்கள். இப்படி ஜனநாயகன் படத்தின், மார்க்கெட் பலரும் வியந்து போகும் அளவுக்கு உள்ளது. ஜனநாயகனின் ஏராளமான நடிகர்களும் இடம் பெற்றுள்ளார்கள். குறிப்பாக மலையாளத் திரைப்படமான பிரேமலுவில் பலரது கவனத்தையும் ஈர்த்த மமிதாபைஜூ இதில் இடம் பெற்றுள்ளார்.

இதே போல் பிரியாமணி பிரகாஷ்ராஜ் பாபி தியோல் நரேன் போன்ற நட்சத்திரங்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க சென்னையிலேயே இந்த திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக அவ்வபோது பொதுக்குழு கூட்டம் உள்பட பல்வேறு வேலைகளில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக படப்பிடிப்பு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்க வேண்டாம் என அவர் ஏற்கனவே கூறிவிட்டாராம்.

- Advertisement -

இதன் காரணமாகவே சென்னையை அடுத்த பையனூரில் காட்சிகளை படமாக்கி வருகிறார் வினோத். இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வார விடுமுறையை, கணக்கில் வைத்தே தயாரிப்பு நிறுவனம் கச்சிதமாக காய் நகர்த்தி இருக்கிறது. இதேபோல் சிவகார்த்திகேயனின், பராசக்தி திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்