- Advertisement -
Homeபொழுதுபோக்குரூல்ஸ் பேசற இவரே விதிமீறி நடக்கலாமா? சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் சுப்ரமணியம் திடீர் ராஜினாமா...

ரூல்ஸ் பேசற இவரே விதிமீறி நடக்கலாமா? சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் சுப்ரமணியம் திடீர் ராஜினாமா – சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

- Advertisement -

சமீபத்தில் விஜய் நடித்த லியோ படம் வெளியானது. இந்த படம் வெளியான போது, தியேட்டர்களுக்கு பங்கு தருவதில் தயாரிப்பாளர் லலித்குமார் கொண்டு வந்த திடீர் நிபந்தனையால் தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதாவது 60-40 என்பது விநியோகஸ்தர் – தியேட்டர் உரிமையாளர் பங்கு என்ற நிபந்தனை அடிப்படையில் புதுப்படங்கள் திரையிடப்பட்டது. முதல் வாரம் 60-40 எனில், அடுத்த வாரம் 40-60 எனவும் மாற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்தமுறை 80-20 என தியேட்டர் உரிமையாளர்களுக்கு பங்கு தரப்பட்டது பெரிய ஏமாற்றத்தை தந்தது.

- Advertisement -

இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமாருக்கும், தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்துக்கும் இடையே காரசாரமான விவாதமும், மோதல் போக்கும் ஏற்பட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பானது.

திருப்பூரில் திருப்பூர் சுப்ரமணியத்துக்கு சொந்தமான மல்டிபிளக்ஸ் தியேட்டர் உள்ளது. 8 திரைகள் கொண்ட இந்த தியேட்டரில் கடந்த வாரத்தில் தீபாவளி அன்று, சல்மான்கான் நடித்த டைகர் 3 சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதுகுறித்த புகாரை அடுத்து அவரது தியேட்டரில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்திய போது காலை 7.10 மணி, 7.25 மணி, 8.10 மணி, 8.25 மணி ஆகிய நேரத்தில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது தெரிய வந்தது. அரசு உத்தரவை மீறி அனுமதி மறுக்கப்பட்ட நேரத்தில் சிறப்பு காட்சி திரையிட்டதாக அதிகாரிகள் தியேட்டர் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதுகுறித்த தகவல் சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், தலைவர் பொறுப்பில் இருக்கிற நீங்களே இப்படி விதிமீறலாமா என பலரும் கேள்வி கேட்ட நிலையில், இன்று தமிழ்நாடு மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் பதவியை, சொந்த வேலை காரணமாக ராஜினாமா செய்வதாக, கடிதம் தந்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியம். இது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்