- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்திலிருந்து வெளிவந்த சூடான தகவல்... சம்பவம் செய்ய காத்திருக்கும் வினோத்... ரிலீஸ் தேதியையும் ஃபிக்ஸ்...

ஜனநாயகன் படத்திலிருந்து வெளிவந்த சூடான தகவல்… சம்பவம் செய்ய காத்திருக்கும் வினோத்… ரிலீஸ் தேதியையும் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க போலையே…

- Advertisement -

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தற்போது தனது கடைசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஹெச் வினோத் இதனை இயக்கி வருகிறார். சென்னையை அடுத்த பையனூரில் இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்னும் தனது கட்சியை தொடங்கிய விஜய், 2026 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடிப்பதே தனது இலக்கு என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது அதற்கான காய்களை திட்டமிட்டு அவர் நகர்த்தி வருகிறார். அந்த சமயத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வந்த விஜய்,

இன்னும் ஒரு படத்துடன் திரையுலக பயணத்தில் இருந்து விலகி முழு அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்து இருந்தார். தற்போது அந்த திரைப்படத்தை தான் வினோத் எடுத்து வருகிறார். படத்தில் நடித்துக் கொண்டே அரசியல் வேலைகளையும் விஜய் கவனித்து வருவதால், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இதன் சூட்டிங் நடத்த வேண்டாம் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டதாம்.

இதன் காரணமாகவே, பையனூரில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மலையாளத் திரைப்படமான பிரேமலு மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த மமீதா பைஜூவும் படத்தில் இருக்கிறார். இதுபோக ப்ரியாமணி, நரேன், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் படத்தில் இருக்கிறார்கள்.

இதில் முக்கிய வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யாவின் கங்குவா திரைப்படத்தினல் மிரட்டி இருந்தார். அதுமட்டுமல்ல பாலிவுட் திரையுலகில் வெளியான அனிமல் திரைப்படத்திலும் அவரது குரூர வில்லத்தனத்தை பார்க்க முடிந்தது. தற்போது அவருக்கும் விஜய்க்கும் தொடர்பான சண்டை காட்சிகளை படமாக்க வினோத் திட்டமிட்டு இருக்கிறாராம்.

அண்மையில் ஸ்ருதிஹாசனும் ஜனநாயகன் திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படும் நிலையில், இறுதி கட்ட படப்பிடிப்பிற்கு வினோத் சென்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு உள்ளார்களாம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்