- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்ல அறிகுறியா தெரியுதே, வெற்றிமாறனை ரகசியமாய் சந்திக்கும் விஜய்யின் மேனேஜர், ஓஹோ கதை அப்படி போகுதா?

நல்ல அறிகுறியா தெரியுதே, வெற்றிமாறனை ரகசியமாய் சந்திக்கும் விஜய்யின் மேனேஜர், ஓஹோ கதை அப்படி போகுதா?

- Advertisement -

வெற்றிமாறன் தற்போது “விடுதலை” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து “வாடிவாசல்” திரைப்படத்தையும் இயக்க உள்ளார்.

வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக திகழ்ந்தாலும் அவர் மீது ஒரு சின்ன விமர்சனமும் உண்டு. அதாவது வெற்றிமாறன் முதலில் இவ்வளவு நாள்தான் படப்பிடிப்பு என்று சொல்லி நடிகர் நடிகைகளை அழைத்துக்கொண்டு போவார்.

- Advertisement -

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, படப்பிடிப்பு நாட்கள் அதிகமாக ஆகிவிடும். “விடுதலை” திரைப்படத்திற்கு நடந்ததும் அதுதான். முதலில் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமே இல்லை. ஆனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாக ஆக அது இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டனர். அவ்வாறுதான் “விடுதலை” இரண்டு பாகங்கள் ஆனது.

“வாடிவாசல்” திரைப்படத்தின் அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்துவிட்டது. நிஜ ஜல்லிக்கட்டு காளைகளை வரவழைத்து டெஸ்ட் ஷூட் கூட நடத்தினார்கள். ஆனால் “விடுதலை” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியாததால் “வாடிவாசல்” படப்பிடிப்பு தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது.

- Advertisement -

இதனிடையே சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது ஒரு ஆச்சரிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது விஜய்யின் மேனேஜரான ஜெகதீஸ் அடிக்கடி வெற்றிமாறனை சென்று சந்திக்கிறாராம். கடந்த மாதம் மட்டும் மூன்று முறை சென்று சந்தித்துவிட்டாராம். இதன் மூலம் வெற்றிமாறன் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தெரிய வருகிறதாம். ஆனால் வெற்றிமாறன் “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் விஜய்யை வைத்து எப்போது இயக்கப்போகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

- Advertisement -

சற்று முன்