வாரிசு அரசியலை போலவே வாரிசு சினிமாவும் சகஜமாகி விட்டது. நடிகர்கள் நடிகைகள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அவர்களது வாரிசுகள் பலரும் சினிமாவுக்குள் மிக எளிதாக நுழைந்து விடுகின்றனர். ஆனால் சினிமாவில் நுழைவது அவர்களுக்கு மிக எளிதாக இருந்தாலும் திறமை உழைப்பு இருந்தால் மட்டுமே சினிமாவில் நீடித்து நிற்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் ஓரிரு படங்களிலேயே காணாமல் போய் விடுவார்கள்.
அந்த சினிமா வாரிசு வரிசையில் சமீபத்தில் தமிழ் சினிமா களத்தில் குதித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா. ஏற்கனவே அவரது அப்பா விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் அவர் சிறுவனாக நடித்திருக்கிறார். இப்போது ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகிறார். அவர் இயக்கிய பீனிக்ஸ் என்ற படத்தில் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் நடந்த பீனிக்ஸ் படத்தில் அறிமுக விழாவில் நான் வேற எங்க அப்பா வேற என்று சூர்யா பேசியது செம வைரலானது. இப்போது பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சூர்யா, பபிள்கம் மென்றபடி ஒரு தெனாவெட்டு உடல் மொழியுடன் புகைப்படங்களுக்கு போஸ் தந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்னும் ஆரம்பிக்கவே இல்லே, அதுக்குள்ள அலம்பலை பாரு என்று மாயி படத்தில் வடிவேலுவை பார்த்து பேசுவது போல, இன்னும் ஒரு படம் கூட ஹிட் கொடுக்கலே, அதுக்குள்ள அலப்பறையை பாரு என்று நெட்டிசன்கள் சூர்யாவை ட்ரோல் செய்து கிண்டலடித்து வருகின்றனர். ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது தம்பி. முதல்ல பணிவாக நடந்துக்க கத்துக்க என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சூர்யா விஜய் சேதுபதி, நான் தீவிரமான விஜய் ரசிகன். அவரோட படங்களை ரொம்பவும் விரும்பி பார்ப்பேன். மெர்சல் படத்தை 30 முறைக்கு மேல் நான் பார்த்திருப்பேன். மாஸ்டர் படத்தில் என் அப்பாவே நடிச்சிருந்தாலும் விஜய்க்காக தான் பார்த்தேன். ஜனநாயகன் படத்துக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.
நான் நடிகர் விஜய் ரசிகன், அவர் படங்களை விரும்பி பார்க்கிறேன் என்று சொல்வது எல்லாம் சரிதான். அதற்காக மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை இப்படி இன்சல்ட் பண்ண வேண்டுமா? மாஸ்டர் படத்தில் அப்பா நடித்திருந்தார். ஆனால் நான் விஜய்க்காக தான் பார்த்தேன் என்று சொல்வதில் இருந்தே, நீங்கள் எந்த அளவுக்கு அப்பாவுக்கு ரெஸ்பெக்ட் தருகிறீர்கள் என்பது புரிந்துவிட்டது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.





