- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரபாஸ் படத்தில் வில்லன் ரோலில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் - அடிக்கடி கொள்கையை...

நடிகர் பிரபாஸ் படத்தில் வில்லன் ரோலில் நடிக்கும் பிரபல தமிழ் நடிகர் – அடிக்கடி கொள்கையை மாத்திக்கறாரே என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி படத்தில் நடித்த பிறகு பான் இந்தியா ஸ்டார் நடிகராக பிரபாஸ் மாறிவிட்டார். இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளிவந்த அந்த படத்தில் அமரேந்திர பாகுபலியாக பிரபாஸ் நடிப்பு வேற லெவலில் இருந்தது. தேவசேனையாக அனுஷ்கா நடித்திருந்தார்.

பாகுபலி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் நடிகராக மாறிவிட்டார். அதன்பிறகு பிரபாஸ் நடித்த கல்கி 2898 சலார் படங்களுக்கும் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், வரும் 3 ஆண்டுகளுக்கு கால்ஷீட் இல்லாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார் பிரபாஸ். நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

- Advertisement -

ராஜா சாப் சலார் 2 ஆகிய படங்களும் அவரது நடிப்பில் லைன் அப்பில் இருக்கின்றன. மேலும் இப்போது பிரபாஸின் 25வது படத்தை அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிமல் படம் கடும் சர்ச்சைகளில் சிக்கிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராஷ்மிகா மந்தனா தாரளமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

இயக்குனர் சந்தீப் கிஷன் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 25வது படத்துக்கு ஸ்பிரிட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படுகோன், பிரபாஸூக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. படக்குழு தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

- Advertisement -

இந்த சூழலில் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ஸ்பிரிட் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்தியில் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. ஒரு கட்டத்தில் நான் ஹீரோ வில்லன் என மாறி மாறி நடிப்பது என் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. தயாரிப்பாளர்களுக்கும் இது வியாபார ரீதியாக பாதிக்கிறது. அதனால் இனி ஹீரோ கேரக்டர் மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக கூறியிருந்தார். ஆனால் இப்போது தனது கொள்கையை தளர்த்திக் கொண்டு இந்தியில் பிரபாஸூக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்