- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு, அவர் படத்துல நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாராமே - என்ன...

விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு, அவர் படத்துல நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாராமே – என்ன பாஸ் திடீருன்னு இப்படி மாறிட்டீங்க?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். துவக்கத்தில் துணை நடிகராக சினிமாவில் சில படங்களில் முகம் காட்டிய விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று மூலம் படம் மூலம் ஹீரோவாக மாறினார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதிக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து தர்மதுரை, கவன், ஆண்டவன் கட்டளை, காதலும் கடந்து போகும், ரெக்க, மாமனிதன் உள்ளிட்ட படங்களால் முன்னணி நடிகராக உயர்ந்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்துக்கு பிறகு துணை நடிகர், ஹீரோ நிலைகளை கடந்து வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து பேட்ட படத்தில் அசத்தினார். தொடர்ந்து விக்ரம், மாஸ்டர், இந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக பதான் படத்திலும் நடித்தார்.

நடிகராக மட்டுமின்றி ஆரஞ்சு மிட்டாய், கிழக்கு தொடர்ச்சி மலை, கடைசி விவசாயி போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார். அதாவது நல்ல கதை அம்சங்கள் கொண்ட, சமுதாயத்துக்கு தேவையான படங்களை தரும் இயக்குநர்கள், அதில் நடிக்கும் நடிகர்களுக்கு முன்னுரிமை தருபவராக விஜய் சேதுபதி இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அவரது 171 படத்தில் வில்லனாக, ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். ஆனால் அதற்கு முன்னதாக அந்த கேரக்டரில் நடிக்க இயக்குநர் அணுகியது விஜய் சேதுபதியை தான். ஏற்கனவே பேட்ட படத்தில், ரஜினிக்கு வில்லனாக நடித்து விட்டார். மேலும் விக்ரம், மாஸ்டர் என லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களிலும் கமல் மற்றும் விஜய்க்கு வில்லனாக நடித்தாகி விட்டது.

அதனால், ரஜினிக்கு மீண்டும் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி மறுத்திருக்கிறார். இதற்கு பின்னால் சம்பள பிரச்னையா, ஏனெனில் அவர் வில்லனாக நடிக்க ரூ. 15 கோடி சம்பளம், அல்லது தொடர்ந்து வில்லன் கேரக்டரில் நடிப்பதில்லை என்ற அதிரடி முடிவுக்கு வந்துவிட்டாரா என்ற சில விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மறுத்ததே, அந்த வாய்ப்பை ராகவா லாரன்ஸ்க்கு பெற்றுத் தந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்