- Advertisement -
Homeபொழுதுபோக்குகேரள ரசிகர்களுக்காக விஜய் செய்த தரமான சம்பவம், யாருமே எதிர்பார்க்காத விஷயம் - தளபதி தாறுமாறா...

கேரள ரசிகர்களுக்காக விஜய் செய்த தரமான சம்பவம், யாருமே எதிர்பார்க்காத விஷயம் – தளபதி தாறுமாறா கௌப்பறாரே…

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படப்பிடிப்புக்காக, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். அங்குள்ள கிரீன் பீல்டு இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. விஜயை காண ரசிகர் கூட்டம் அங்கும் திரண்டு வருகிறது.

முதலில் இப்படி ஒரு காட்சியை படப்பிடிப்பு நடத்த இலங்கையில்தான் படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் இலங்கை சென்றால் அங்குள்ள சில அரசியல்வாதிகள் விஜயை நேரில் சந்திக்க ஆயத்தமாகினர். இது விஜயின் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் இலங்கை பயணமே வேண்டாம் என விஜய் தவிர்த்துவிட்டார்.

- Advertisement -

அதனால்தான் அங்கு படம்பிடிக்க வேண்டிய காட்சிகளை, கேரளாவுக்கு மாற்றிவிட்டனர். எனினும் விஜய்க்கு, 14 ஆண்டுகளுக்கு பிறகு கேரள ரசிகர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பு மீண்டும் அமைந்திருக்கிறது. கேரளாவிலேயே நேரில் சென்று ரசிகர்களை சந்திப்பதும், தங்கள் ஊருக்கு வந்திருக்கும் விஜயை காண்பதும் அங்குள்ள ரசிகர்களுக்கு குஷியை தந்துள்ளது.

விமான நிலையத்தில் திரண்டு விஜய் காரை நகர்த்த முடியாத அளவுக்கு நெருக்கடி தந்து, தங்களது மிகுதியான அன்பை ரசிகர்கள் காட்டினர். அதே நேரத்தில் விஜய் பயணித்த காரின் கண்ணாடிகளை நொறுக்கி, பக்கவாட்டு பகுதிகளில் மோதி நசுக்கி, காரை சிதைத்துவிட்டனர். அந்த கார் சேதமடைந்த வீடியோ சமீபத்தில் வைரலானது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கேரவன் வேன் மீது ஏறி அங்கு திரண்டிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட விஜய், ரசிகர்களை பார்த்து கையசைத்து அவர்களை குஷிப்படுத்தினார். எனினும் தொடர்ந்து விஜயை காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் ஷூட்டிங் பகுதிக்கு வந்துக்கொண்டே இருக்கின்றனர்.

நேற்று கேரவன் மீதேறிய நடிகர் விஜய், அங்கு திரண்டிருந்த கேரள மக்கள் மத்தியில் மலையாளத்தில் பேசினார். குட்டன், சேட்டன், சேச்சி, உங்களை எல்லாம் இப்படி நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன் என, அவர் மலையாளத்தில் பேசி அங்கிருந்த ரசிகர்கள் ஆரவார கூச்சலிட்டு, விசிலடித்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்