- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்பி ஆன சந்தோஷத்தை கூட கொண்டாட முடியலையே, அடுத்தடுத்த விமர்சனங்களில் சிக்கிய கங்கனா ரெனாவத் -...

எம்பி ஆன சந்தோஷத்தை கூட கொண்டாட முடியலையே, அடுத்தடுத்த விமர்சனங்களில் சிக்கிய கங்கனா ரெனாவத் – இரட்டை வேடம் போடுகிறாரா?

- Advertisement -

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக நேற்று இரவு பதவியேற்றார். டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இவ்விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சலப் பிரதேசம் மாண்டி தொகுதியில் போட்டியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் வெற்றி பெற்று எம்பி ஆகி உள்ளார்.

இந்தியில் பல படங்களில் நடித்த நடிகை கங்கனா ரெனாவத், தமிழில் இதுவரை 3 படங்களில் நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் தாம்தூம், ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் தலைவி, பி வாசு இயக்கிய சந்திரமுகி 2 ஆகிய படங்களில் அவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஆனால் இந்த 3 படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறாததால், தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.

- Advertisement -

இந்நிலையில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம், மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரெனாவத், காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆனால் 3 தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலம், சண்டிகார் விமான நிலையத்துக்கு சென்ற அவரை, அங்கிருந்த சிஐஎஸ்ப் பெண் போலீஸ் குல்விந்தர் கவுர் கன்னத்தில் ஓங்கி அறைந்த சம்பவம். நாடு முழுவதும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து நேற்று டிவிட்டரில் பதிவிட்ட நடிகை கங்கனா ரெனாவத், ஒரு பெண்ணின் மீது அவரது அனுமதியின்றி கைவைத்து தாக்குவது குற்றம். கற்பழிப்போர், கொலையாளி, திருடர்கள் என குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு அவரவர் தரப்பில் ஒரு நியாயம் இருக்கும். எனினும் அவர்கள் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுகின்றனர். இதுபோன்ற உளவியல் குற்றப் போக்கு மாற யோகா, தியானம் செய்யுங்கள் என்று பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

இது தற்போது செம வைரலாகி, நடிகை கங்கனா ரெனாவத் இரட்டை வேடம் போடுவதாக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதால் கங்கனா ரெனாவத்தை அறைந்தேன். என் அம்மாவும் அந்த போராட்டத்தில் இருந்தார் என குல்விந்தர் கவுர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த கங்கனா ரெனாவத், இதை உளவியல் குற்றப் போக்கு என விமர்சித்திருந்தார்.

ஆனால் கடந்த 2022ம் ஆண்டில் தன்னுடைய மனைவி குறித்து அவதூறாக பேசியதாக கிறிஸ் ராக்கை, வில் ஸ்மித் அறைந்திருந்தார். அப்போது வில் ஸ்மித்துக்கு ஆதரவாக, நடிகை கங்கனா ரெனாவத் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக என்னுடைய அம்மா, அல்லது என்னுடைய சகோதரியை இழிவுபடுத்தினால் நானும் வில் ஸ்மித் மாதிரியே, கிறிஸ் ராக்கை அறைந்திருப்பேன் எனக் கூறியிருந்தார். அந்த வழியில்தான், குல்விந்தர் கவுர், கங்கனா ரெனாவத்தை அறைந்திருக்கிறார் என நெட்டிசன்கள் பதிலடி தந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்