- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தயாரான தவெக தலைவர் விஜய், தரமான சம்பவங்களை காண காத்திருக்கும்...

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தயாரான தவெக தலைவர் விஜய், தரமான சம்பவங்களை காண காத்திருக்கும் தளபதி ரசிகர்கள் – போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படம் அவரது 69வது படம் என்ற நிலையில், இத்துடன் சினிமா நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய், அடுத்ததாக தமிழக அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட உள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் இயக்கத்தை துவக்கிய நடிகர் விஜய், சமீபத்தில் தனது கட்சியின் முதலாமாண்டை நிறைவு செய்து கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் தேர்தல் வியூக ஆலோசகர் பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரும் பங்கேற்று பேசினார்.

- Advertisement -

ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்த பிறகு வருகிற ஜூன் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள நடிகர் விஜய் தயாராகி வருகிறார். கடந்த ஆண்டிலேயே இந்த சுற்றுப் பயணத்தை அவர் திட்டமிட்ட நிலையில், கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்த வேண்டி இருந்ததால் சுற்றுப்பயணத்தை இந்த ஆண்டுக்கு தள்ளி வைத்திருந்தார்.

வருகிற ஜூன் மாதம் துவங்கி தமிழ்நாடு முழுவதும் 2 கட்டங்களாக அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்கள், முக்கிய தொகுதிகள், குறிப்பாக முக்கிய நகரங்களில் விஜய் மக்களை நேரில் சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்டுகிறார். மக்களின் குறைகளை கோரிக்கைகளை நேரில் கேட்டறிகிறார்.

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வசதியாக, ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிய பிரசார வாகனம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. இதில் சகல வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. குளியலறை, கழிப்பறை, ஓய்வறை, படுக்கையறை, தகவல் தொடர்பு வசதிகள் என சகல வசதிகள் கொண்ட இந்த வேனில்தான் விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இப்போதெல்லாம் பிரசார வாகனங்களில் செல்லும்போது தக்காளி முட்டைகளை வீசுதல், கற்களை வீசுதல் போன்ற அசம்பாவித சம்பவங்களும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு நடக்கின்றன. விஜய் மீதும் சில அரசியல் கட்சிகள் காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்க அதிக வாய்ப்பிருப்பதால் எளிதில் சேதமடையாத உடைக்க முடியாத கண்ணாடி கதவுகள் ஜன்னல்கள் என இந்த பிரசார வேன் அதிக பாதுகாப்புடன் வடிமைக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்