- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னய்யா தமிழ் சினிமாவுக்கு வந்த ஒரு பெரும் சோதனை, விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவில்...

என்னய்யா தமிழ் சினிமாவுக்கு வந்த ஒரு பெரும் சோதனை, விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரபலம் – புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆரும் நடிகர் திலகமும் சிவாஜி கணேசனும் ஹீரோக்களாக நடித்து ஜெயித்த தமிழ் சினிமாவில் இப்போது யாரெல்லாம் ஹீரோவாக அவதாரம் எடுப்பார்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது. சமூக வலைதளங்களில் 4 ரீல்ஸ் போட்டால் கூட போதும். சினிமாவில் ஹீரோ ஆகும் தகுதி வந்துவிட்டது என்று சொல்லும் காலமும் விரைவில் வந்து விடலாம்.

டிவி சானல்களில் காமெடியாக பேசி சிரிப்பை வரவழைக்கும் ஒரு கலைஞர் அடுத்ததாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் என்பது தமிழ் சினிமாவுக்கு வரமா, சாபமா என்று தெரியவில்லை. அதுவும் காமெடி கலைஞர்கள் கூட நேரடியாக ஹீரோவாக களத்தில் குதித்து 10 பேரை அடித்து நாயகியுடன் டூயட் பாட வருவதுதான் காலத்தில் கொடுமையாக உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே விஜய் டிவியில் இருந்து சிவகார்த்திகேயன் சந்தானம் கவின் ரோபோ சங்கர் கேபிஒய் பாலா என பலர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து இப்போது ஹீரோவாக வலம் வருகின்றனர். இதில் காமெடி கேரக்டரில் பல படங்களில் நடித்த ரோபோ சங்கர் மட்டும் ஓரிரு படங்களில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆன நிலையில் துரதிஷ்டவசமாக ரோபோ சங்கர் திடீரென உடல்நலக்குறைவால் மறைந்து விட்டார்.

அது இது எது நிகழ்ச்சியில் காம்பியராக விஜய் டிவியில் இருந்த சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திர நடிகராக மாறியுள்ளார். லொள்ளு சபாவில் காமெடி ரோலில் நடித்த சந்தானம் சினிமாவில் காமெடி செய்தவர் பிறகு ஹீரோவாக நடித்து வருகிறார். கேபிஒய் பாலாவும் காந்தி கண்ணாடி படம் மூலம் ஹீரோவாக நடித்துவிட்டார்.

- Advertisement -

சீரியல் நடிகராக இருந்த கவின் பிக்பாஸ் வீட்டுக்கு சென்று வந்த பிறகு பல படங்களில் நடித்து இளம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறார்.இந்த சூழ்நிலையில் விஜய் டிவியில் இருந்து அடுத்ததாக ராமர் தமிழ் படம் ஒன்றில் ஹீரோவாக என்ட்ரி தருகிறார். இவர் ஏற்கனவே கோமாளி போன்ற சில படங்களில் சில காமெடி காட்சிகளில் நடித்தவர்தான்.

விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் நடித்து காமெடி டயலாக் பேசி பிரபலமானவர் ராமர். இப்போது அவர், சற்று நேரத்தில் தீர்ப்பு என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ரிலீஸ் செய்திருக்கிறார். மக்கள் மத்தியில் பிரபலம் என்கிற ஒரு விஷயம் மட்டுமே தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் தகுதியை தந்துவிடுமா என்று ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்