நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 3 மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார். ராஜஸ்தான், துருக்கி, இலங்கை, இஸ்தான்புல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் அவரது 69 படம் குறித்த எந்த தகவலும் இதுவரை வரவில்லை. ஜிதர்தண்டா டபுள் எக்ஸ் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் படத்திலோ, இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலோ நடிப்பார் என முதலில் பேசப்பட்டது. ஆனால் அதுபற்றி விஜய் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
வழக்கமாக விஜய் நடித்துவரும் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டாலோ, அடுத்த படம் குறித்த பிராசஸ் ஆரம்பமாகி விடும். அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பு நிறுவனம், இசையமைப்பாளர் என பல விஷயங்கள் உறுதியாகி விடும். விஜய் இந்த படப்பிடிப்பை முடித்த சில நாட்களில் அடுத்த படங்களில் நடிக்க துவங்கி விடுவார்.
இந்த முறையில்தான், லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் இப்போது கோட் படப்பிடிப்பு 70 சதவீதம் கடந்தும் இன்னும் விஜயின் அடுத்த படம் குறித்த தகவல் இல்லாதது, விஜய் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
சட்டசபை தேர்தல் 2026ம் ஆண்டில்தான் என்பதால் இன்னும் 2 ஆண்டுகள் முழுதாக இருப்பதால், இன்னொரு படத்தில் கண்டிப்பாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இப்போது வெளியாகி உள்ளது.
அதாவது ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான டிடிவி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம், விஜயை வைத்து படம் தயாரிக்க முன்வந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தயாரிப்பாளர் டிவிவி தனய்யா தரப்பில் இருந்து விஜயிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்களுடன் இந்த படத்தில் விஜய் கைகோர்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.





