- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்திய அளவில் சிறந்த இயக்குனராக பார்க்கப்பட்ட மணிரத்னமா இப்படி?, தக்லைப் படம் குறித்த தகவலால் ஆடிப்போன...

இந்திய அளவில் சிறந்த இயக்குனராக பார்க்கப்பட்ட மணிரத்னமா இப்படி?, தக்லைப் படம் குறித்த தகவலால் ஆடிப்போன அவரது ரசிகர்கள் – என்ன கொடுமை சார் இது?

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம், தனது படைப்புகளால் இந்திய அளவில் பேசப்படும் ஒரு முக்கிய படைப்பாளியாக பார்க்கப்படுபவர். அவரது படங்கள் என்றாலே அது வேறு மாதிரியான தனித்துவத்தில் இருக்கும். வழக்கமான படங்களை போல இல்லாமல், அவரது படங்களை ரசிப்பதற்கு என்றே ஒரு தனிக்கூட்டம் இருக்கிறது. இதுவரை அவரது படங்களும் அப்படிதான் இருந்திருக்கின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த நாயகன், அக்னி நட்சத்திரம், செக்கச் சிவந்த வானம், பம்பாய், உயிரே, ஆயுத எழுத்து, மின்சார கனவு, தளபதி என எந்த படமாக இருந்தாலும் அந்த படங்களில் மணிரத்னத்தின் வாசம் இருக்கும். அந்த கதாபாத்திரங்களில் தனித்தன்மை வெளிப்படும். இதுவரை அவரது படங்கள் அப்படிதான் இருந்திருக்கின்றன.

- Advertisement -

ஆனால் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கிய போது, இயக்குனராக மணிரத்னம் தனது தனித்துவத்தை காட்ட முடியாமல் ரசிகர்களை ஏமாற்றினார். ஒரு கட்டத்தில், நாவலின் முடிவை படத்தின் இறுதியில் மாற்றியமைத்து, ரசிகர்களை வெறுப்பேற்றினார். உண்மை கதையை புனைவு கதையாக முடித்தது கடும் அதிருப்தியை தந்தது.

என்றாலும், மணிரத்னம் மீண்டும் கமலுடன் கைகோர்த்து இருப்பதால் நிச்சயமாக தக்லைப் படம் பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கும். குறிப்பாக இதில் சிம்புவும் இருக்கிறார். நாயகன் படத்துக்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து கமல், மணிரத்னம் இணையும் இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்றுதான் ரசிகர்கள் காத்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் காயல்பட்டணத்துக்காரன் என கமல் டயலாக் பேசி வெளிவந்த டீசருக்கும், படத்துக்கும் சம்பந்தம் இல்லை. படத்தின் புரமோவுக்காக அப்படி எடுக்கப்பட்டது என, ஆரம்பத்திலேயே மணிரத்னமும், கமலும் பலத்த அதிர்ச்சியை கொடுத்தனர். இப்போது அதை விட மிக மோசமான ஒரு தகவலை கேள்விப்பட்டு ரசிகர்கள் நொந்து போய் உள்ளனர்.

அதாவது இயக்குனர் மணிரத்னம், தனது வழக்கமான பாணியை விட்டு இயக்குனர் ஹரி போல, இந்த படத்தை உருவாக்கி வருகிறார். மசாலா அயிட்டங்கள் நிறைந்த தரை லோக்கல் கதை கொண்ட ஆக்சன் படமாக தக்லைப் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன், லோக்கல் ரவுடி போன்ற கேரக்டரில் இதில் நடித்து வருகிறார். அதாவது மகராசன் படத்தை போல், காதல் பரிசு சிலுவை போன்ற கேரக்டரில் கமல் வருவார் என்று கூறப்படுகிறது. இதனால் மணிரத்னம் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்