- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் உடலுக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த மக்கள்... 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை... விடை...

விஜயகாந்த் உடலுக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த மக்கள்… 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை… விடை பெற்றார் கேப்டன்…

- Advertisement -

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நுரையீரல் அலர்ஜி நோய் காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல், முதலில் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜய்காந்தின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

விஜயகாந்த் மரணம் அடைந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கோயம்பேட்டில் குவிந்தனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து திரை உலகை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் விஜய்காந்திற்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

- Advertisement -

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி தயாநிதி மாறன், நடிகர் விஜய், இயக்குனர் மாரி செல்வராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட ஏராளமானோர் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள். கோயம்பேட்டில் பொதுமக்கள் பலரும் கூட ஆரம்பித்ததால், பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல் ராஜாஜி அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தீவுத்திடலை தமிழக அரசு ஒதுக்கியது. அங்கு இன்று காலை 6:00 மணிக்கு விஜயகாந்தின் உடல் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ஏராளமானோர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -

இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசு செய்திருந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்டோர் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதன் பிறகு மதியம் விஜய்காந்தின் உடல், தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டிற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சாலையோரம் கூடி இருந்த ஏராளமான மக்கள் விஜயகாந்தின் உடல் சென்ற வாகனத்தின் மீது மலர்களைத் தூவினர்.

இதன் பிறகு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு விஜய்காந்தின் உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இறுதி அஞ்சலியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்ய, 50 கிலோ எடை கொண்ட சந்தன பேழையில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

- Advertisement -

சற்று முன்