- Advertisement -
Homeபொழுதுபோக்குசும்மாவே பங்கம் செய்வாரு, இப்படி வசமா விஜய் சிக்குனா விடுவாரா ? - ப்ளு சட்டை...

சும்மாவே பங்கம் செய்வாரு, இப்படி வசமா விஜய் சிக்குனா விடுவாரா ? – ப்ளு சட்டை மாறனுக்கு சப்போர்ட் ஆக தலையாட்டும் தளபதி ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, ஆறு மாதங்களாகும் நிலையில், இம்மாதத்துடன் நிறைவடைய இருக்கிறது. இப்போது கேரளா, திருவனந்தபுரத்தில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு, இப்போது தளபதி என்ற பட்டத்துடன் அரசியல் கட்சி தலைவர் என்ற புதிய அடையாளமும் வந்துவிட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல, கேரளாவிலும் தனக்கு மாஸ் ஆன ரசிகர் கூட்டம் உள்ளது என்பதை இப்போது விஜய் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார். 14 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் உள்ள விஜயை காண தினமும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் திரண்டு வருகிறது.

- Advertisement -

நடிகர் விஜயை பொருத்தவரை எப்போதுமே ஒரே மாதிரியான உடல் தோற்றத்தில் இருப்பவர்தான். 1990களில் தமிழ் சினிமாவில் எப்படி ஸ்லிம் ஆன தோற்றத்தில் உள்ளே வந்தாரோ, அதே போல்தான் இப்பவும் இருக்கிறார். சிலருக்கு மீசை தாடி இருக்கும். சிலருக்கு மீசை இல்லாமல் இருந்தால் கெட்டப் நன்றாக இருக்கும்.

அந்த வகையில் மீசை இல்லாமல் கமல்ஹாசன், அஜீத்குமார், சிலம்பரசன், மாதவன், சூர்யா போன்றவர்களுக்கு அந்த கெட்டப் பொருத்தமாக இருக்கும். அதனால் பெரும்பாலான கேரக்டர்களில் அப்படி மீசை இல்லாமல் அவர்கள் நடித்துள்ளனர். ஆனால் எல்லோருக்குமே மீசை இல்லாத முகத்தோற்றம் அவ்வளவதாக பொருந்தாது. முகமே வேறுபட்டு தெரியும். இந்த நிலையில் ஹேர் ஸ்டைலையும் மாற்றிவிட்டால் அவர்களது அடையாளமே மாறிவிடும்.

- Advertisement -

கோட் படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு, விஜயின் தோற்றத்தையே டைரக்டர் வெங்கட்பிரபு மாற்றி விட்டார். மீசை தாடியை மழுங்க எடுத்துவிட்ட தோற்றத்தில், நீளமான தலைமுடியுடன் விஜயை வேறு மாதியாக மாற்றி விட்டதால், அவரது கெத்தான தோற்றமே போய்விட்டது என்பதை விஜய் ரசிகர்ளே வருத்தமுடன் ஒத்துக்கொள்கின்றனர்.

இதுகுறித்து விஜயின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு கேப்சன் பதிவிட்டுள்ள சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என, விவேக் காமெடி பன்ச் டயலாக்கை பதிவிட்டு பங்கம் செய்துள்ளார். என்னதான் கேரக்டர் என்றாலும், அதற்கான இப்படியா ஒரு டாப் நடிகரின் கெட்டப்பை மாற்றுவது என்றும் விஜய் ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கெட்டப்பை ஏற்கனவே அஜீத்குமார், ரஜினி ரசிகர்கள் கிண்டலடித்து வரும் நிலையில், படம் மட்டும் ரிலீஸ் ஆகட்டும், இந்த கெட்டப்புல விஜய் படம் சொதப்பட்டும் அப்புறமா வெங்கட்பிரபுவுக்கு இருக்கு, எனவும் விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்