- Advertisement -
Homeபொழுதுபோக்குஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் அவரது அப்பா விஜய் சில காட்சிகளில் வருவாரா? அல்லது...

ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் அவரது அப்பா விஜய் சில காட்சிகளில் வருவாரா? அல்லது பாடுகிறாரா? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடும் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அரசியல் களத்தில் முழுவீச்சில் செயல்பட இருக்கிறார். 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்வதே லட்சியமாக கொண்டிருக்கிறார்.

விஜயின் மகன் சஞ்சய் தன் அப்பாவை போல சினிமாவில் ஹீரோ ஆக விரும்பாமல் தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகர் போல இயக்குனராக தமிழ் சினிமா களத்தில் இறங்கியிருக்கிறார். தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் பரியா அப்துல்லா நடிப்பில் புதிய படத்தை டைரக்ட் செய்து வருகிறார். ராயன் படத்தில் தனுஷூக்கு தம்பியாக நடித்தவர்தான் சந்தீப் கிஷன் என்பது கவனிக்கத்தக்கது.

பொதுவாக வாரிசு நடிக்கும் படம் என்றாலே அதில் தனது அப்பாவை ஒரு காட்சியில் வரச் செய்வார்கள். பாணா காத்தாடி படத்தில் அதர்வா நடித்த போது அவரது அப்பா முரளி ஒரு காட்சியில் வந்தார். அதே போல் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் விஜய் ஏதேனும் ஒரு காட்சியில் வர வாய்ப்புள்ளதா என்றால் இல்லை அதற்கான வாய்ப்பே இல்லை என்றே தகவல் கிடைத்துள்ளது.

ஜனநாயகன் படத்துக்கு பிறகு எந்த படத்திற்காகவும் கேமரா முன்பு நிற்பதில்லை என்ற தீர்க்கமான முடிவில் விஜய் இருக்கிறார். அதே நேரத்தில் விஜய் நல்ல பாடகர். பல படங்களில் பாடியிருக்கிறார். அதனால் ஒரு வேளை தனது மகன் இயக்கும் முதல் படத்தில் ஏதேனும் ஒரு பாடலை பாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

அதே போல் நடிகர் விஜயின் அம்மா, ஜேசன் சஞ்சயின் பாட்டி ஷோபா சந்திரசேகர் ஒரு காலத்தில் பிரபலமான பாடகியாக இருந்தவர். விஜயுடன் சில பாடல்களை இணைந்து பாடியிருக்கிறார். ஒருவேளை பேரனின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஷோபா சந்திரசேகர் பாட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அத்துடன் விஜயின் அப்பாவும் இயக்குனர் ஜேசன் சஞ்சயின் எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனர் மட்டுமல்ல, பல படங்களில் அவர் நடித்தும் இருக்கிறார். அதனால் தனது பேரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தாத்தா சந்திரசேகர் சில காட்சிகளில் வருவாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தனது குடும்பத்தில் அப்பா தாத்தா பாட்டி என யாருக்காவது ஜேசன் சஞ்சய் ஏதேனும் ஒரு விதத்தில் வாய்ப்பளிப்பாரா, அல்லது இளம்ஹீரோவாக தோற்றமளிக்கும் அவரே சில காட்சிகளில் வருவாரா என்ற எதிர்பார்ப்பும் தளபதி விஜய் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

சற்று முன்