- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென முடிவை மாற்றிக் கொண்ட விஜய் மனைவி சங்கீதா - அப்பாடா என பெருமூச்சு விட்ட...

திடீரென முடிவை மாற்றிக் கொண்ட விஜய் மனைவி சங்கீதா – அப்பாடா என பெருமூச்சு விட்ட தவெக கட்சியினர்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு, மனு தாக்கல் செய்திருக்கிறார். நாளை 20ம் தேதி திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இது தவெக கட்சியினர் மத்தியிலும் தளபதி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரஸ்மீட் ஏற்பாடு செய்து செய்தியாளர்களை சந்தித்து சங்கீதா பேச இருப்பதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவுக்கு சில தினங்களே உள்ளதால் சங்கீதாவின் இந்த நடவடிக்கை நடிகர் விஜயக்கு அரசியல் களத்தில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று தவெக கட்சியினர் கவலையில் இருந்தனர்.

- Advertisement -

குறிப்பாக 233 தொகுதிகளில் களம் காணும் தவெக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும், ஓட்டுகளின் எண்ணிக்கை குறையும் ஒரு மோசமான சூழலும் நிலவியது. வரும் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக சங்கீதா நடத்தும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு அரசியல் எதிரிகளுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்க விஜய் தரப்பிலிருந்து சங்கீதாவிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. தேர்தலை முன்னிறுத்தி தற்போதைய தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்ளுமாறு விஜய் தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கையை சங்கீதா பரிசீலித்த நிலையில் நாளை 20ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்க்க சங்கீதா முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சங்கீதாவின் இந்த திடீர் மனமாற்றம் விஜய் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு நிம்மதியை தந்துள்ளது. ஏனெனில் சங்கீதா ஒருவேளை பிரஸ்மீட் நடத்தினால் அது தவெக தலைவர் விஜய் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளை விட செய்தியாளர்கள் தாறுமாறாக கேள்விகள் கேட்டு இன்னும் விஜய் மீதான விமர்சனங்கள் சர்ச்சகைள் அதிகரிக்கும் சூழலை உருவாக்குவர்.

குறிப்பாக நடிகை திரிஷா விஜய் குறித்த விஷயங்களை இன்னும் பெரிதுபடுத்துவார்கள். குடும்ப விஷயங்களை அம்பலப்படுத்தி இன்னும் அதை வைரலாக்குவார்கள். அப்படிப்பட்ட விஷயங்கள் பிரஸ்மீட்டில் நடந்தால் அது இன்னமும் விஜய்க்கு எதிரான தாக்குதல்களாக மாறும். விஜய் மீதான அவதூறுகளை அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக இது இருக்கும் என்ற சூழலில், சங்கீதாவின் இந்த மனமாற்றம் தவெக கட்சியினருக்கும் தளபதி ரசிகர்களுக்கும் நிம்மதியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்