- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்கலான் படத்தில் இப்படி ஒரு தரமான சம்பவம் இருக்குதா? ஆனா கடைசி வரைக்கும் சீக்ரெட்டாவே பா...

தங்கலான் படத்தில் இப்படி ஒரு தரமான சம்பவம் இருக்குதா? ஆனா கடைசி வரைக்கும் சீக்ரெட்டாவே பா ரஞ்சித் இருந்துட்டாரே…? – அப்போ ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பல அற்புதமான நடிகர்களில் ஒருவர்தான் சியான் விக்ரம். ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு சினிமாவில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் பல படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். காதலன் போன்ற சில படங்களில் ஹீரோக்களுக்கு பின்னணி குரலில் பேசியிருக்கிறார்.

நடிகர் விக்ரம் சினிமா பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை, ஏற்றத்தை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா தான். அவர் இயக்கிய சேது படம்தான் விக்ரம் சினிமா நடிப்பில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை தந்தது. அந்த படத்தில்தான் சியான் என்ற பட்டப் பெயர் அவருக்கு கிடைத்தது.

- Advertisement -

அதன்பிறகு நடிகர் விக்ரமை நன்றாக சில இயக்குனர்கள் பயன்படுத்திக்கொண்டனர். குறிப்பாக அந்நியன், ஐ படங்களில் இயக்குனர் ஷங்கரும், இயக்குனர் ஏஎல் விஜய், தெய்வத்திருமகள் படத்திலும், தூள், தில் படங்களில் இயக்குனர் தரணியும், பிதாமகன் படத்தில் இயக்குனர் பாலாவும் விக்ரமின் பல பரிமாணங்களை வெளிப்படுத்த வைத்தனர்.

அதுமட்டுமின்றி, கண் பார்வையற்ற கேரக்டரில் நடித்த காசி படம், ரசிகர்களை திகைக்க வைத்தது. இந்த படத்தை நடிகர் விக்ரம் தியேட்டரில் பார்த்துக்கொண்டிருந்த போது, அருகில் இருந்த ஒரு முதியவர், கண் தெரியாத போதும் இந்த இளைஞர் படத்தில் எப்படி சிறப்பாக நடித்திருக்கிறார் பாருங்கள் என்று விக்ரமிடமே பாராட்டி இருக்கிறார். அதைக்கேட்டு விக்ரம் கதறி கதறி அழுதிருக்கிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட நிகரற்ற நடிப்பு கலைஞர் விக்ரமை, தங்கலான் படத்தில் மிக வித்யாசமான கேரக்டரில் ஆதிவாசி மனிதராக நடிக்க வைத்திருக்கிறார். இந்த படத்துக்கு நிச்சயமாக ஏகப்பட்ட விருதுகள் காத்திருக்கின்றன என்று பலரும் கூறி வருகின்றனர். வரும் 15ம் தேதி தங்கலான் படம் ரிலீஸாகிறது.

இப்போது தங்கலான் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இத்தனை நாட்களாக இயக்குனர் பா ரஞ்சித் சீக்ரெட்டாக வைத்திருந்த ஒரு விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தங்கலான் படத்தில் விக்ரம், இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் மற்றொரு கேரக்டர் என்ன என்பது படக்குழுவினருக்கு மட்டுமே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்