- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ஓகே சொன்ன கதையில் நடித்த விக்ரம், கடைசியில் படம் என்னாச்சு தெரியுமா? - பல...

விஜய் ஓகே சொன்ன கதையில் நடித்த விக்ரம், கடைசியில் படம் என்னாச்சு தெரியுமா? – பல ஆண்டுகளுக்கு பின் நடந்த உண்மையை சொன்ன டைரக்டர்

- Advertisement -

நடிகர் விக்ரம், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்புக்காகவும், அவர் ஏற்கும் கேரக்டருக்காகவும் உடலை வருத்திக்கொள்வது, மெனக்கெடுவது என்பது விக்ரமிடம் மட்டுமே காணப்படுகிறது. தனது கேரக்டரை டெடிகேஷனாக கொண்டு வருவதில் விக்ரம் மிகவும் ஆர்வம் காட்டுவார். முழு திறமைையும் வெளிப்படுத்துவார்.

அவரது நடிப்பில் உருவான காசி, ஐ, அந்நியன், சேது போன்ற படங்களில் தனது கேரக்டருக்காக பலவிதங்களில் தன்னை வருத்திக்கொண்டு நடித்தவர்தான் விக்ரம். இப்போது அவரது நடிப்பில், ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள தங்கலான் படம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வமும், எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. காரணம், பா ரஞ்சித் இயக்கிய படம் என்பதும் கவனிக்கத்தக்கது.

விக்ரம் நடித்த படங்களில், சில படங்கள் தோல்வியடைந்திருந்தாலும் அந்த படங்களிலும் விக்ரம் நடிப்பு மிக சிறப்பாக இருந்துள்ளது. குறிப்பாக, கடந்தாண்டில் வெளியான கோப்ரா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு முக்கிய காரணம், திரைக்கதையில் ஏற்பட்ட குளறுபடிகள்தான். அதை சரியாக கொண்டு வந்திருந்தால் அந்த படமும் ஹிட் ஆகியிருக்கும்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் நடித்த படம் 10 எண்றதுக்குள்ள. இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் சமந்தாவும் படம் முழுவதும் வருவது போல, முக்கிய கேரக்டரில் விக்ரமுடன் நடித்திருந்தார். படம் ரசிக்க கூடிய வகையில் இருந்தாலும், ரசிகர்களின் வரவேற்புக்கு இந்த படத்துக்கு கிடைக்கவில்லை.

இந்த படம் குறித்து படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன்பே 10 எண்றத்துக்குள்ள படத்தின் கதையை தயார் செய்துவிட்டேன். அந்த கதையை நடிகர் விஜயிடம் சொல்ல அவரும் கதை பிடித்துப் போய் உடனே ஓகே சொல்லி விட்டார்.

அந்த கதையை ஏவிஎம் நிறுவனத்துக்கு அனுப்பி தயாரிக்கும்படி கேட்டு இருக்கிறார் டைரக்டர் விஜய் மில்டன். அந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடிகர் பிரகாஷ் ராஜை நடிக்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில காரணங்களால் படம் டிராப் ஆகி விட்டது என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு, விக்ரம் சமந்தா நடிப்பில் அதே கதையை இயக்கி உள்ளார். ஆனால் ரசிகர்களுக்கு படம் பிடிக்காததால் பிளாப் ஆகி விட்டது.

சற்று முன்