- Advertisement -
Homeபொழுதுபோக்குமொழிக்கு ஒரு வில்லனை கமிட் செய்யும் தயாரிப்பாளர் அஜீத்குமார் - டேர் டெவில் படத்தின் தமிழ்...

மொழிக்கு ஒரு வில்லனை கமிட் செய்யும் தயாரிப்பாளர் அஜீத்குமார் – டேர் டெவில் படத்தின் தமிழ் வெர்ஷன் வில்லன் யார் தெரியுமா?

- Advertisement -

குட்பேட் அக்லி படத்துக்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் நடிகர் அஜீத்குமார் தனது அடுத்த படத்தில் அதாவது அவரது 64வது படத்தில் நடிக்க உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை நடிகர் அஜீத்குமாரே தனது மனைவி ஷாலினி பெயரில் தயாரிக்கிறார்.

நடிகர் விஜய் நடிகர் அஜீத்குமார் இடையே சினிமாவில் போட்டி இருந்த வரை இருவருக்கும் இடையிலான ரசிகர்களின் மனோபாவம் அஜீத்குமாரின் படங்களுக்கு நல்ல ஹைப் கொடுத்தது. ஆனால் இப்போது விஜய் தமிழ்நாட்டில் முதல்வராகி விட்டார். சினிமாவில் இருந்தும் முற்றிலுமாக விலகி விட்டார்.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் அஜீத்குமாரும் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் கார் ரேஸ்சில் அதிக கவனமும் ஆர்வமும் காட்டி வருகின்றனர். குட்பேட் அக்லி படத்துக்கு பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எனினும் கார் ரேஸ் போட்டிகளுக்காகவும் அவர் கோடிக்கணக்கில் பொருளீட்ட வேண்டிய சூழல் இருப்பதால் சினிமாவில் நடித்து அதன்மூலம் கணிசமான வருமானத்தை திரட்ட முயற்சிக்கிறார். அதனால்தான் அவரே சொந்தமாக படம் தயாரிக்கவும் முன்வந்திருக்கிறார். ஏனெனில் பெரிய இமேஜ் இல்லாததால் அஜீத்குமார் கேட்கும் சம்பளத்தை தந்து அவரது படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் தயாராக இல்லை.

- Advertisement -

வருகிற நவம்பர் மாதம் டேர்டெவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதற்கான தயாரிப்பு செலவுகளில் அதிக கவனம் செலுத்தி வீண் செலவுகளை தவிர்க்க அஜீத்குமார் தரப்பு முயற்சித்து வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்க இருந்த கேரக்டரில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க உள்ளார்.

அதே போல் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அதாவது தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பான்இந்தியா மொழி படமாக இது உருவாக உள்ள நிலையில் ஒவ்வொரு மொழியில் இருந்தும் பிரபல நடிகர்களை படத்தில் வில்லனாக காட்ட அஜீத்குமார் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தமிழ் வெர்ஷனில் நடிகர் அஜீத்குமார் தான் வில்லனாக ஒரு கேரக்டரில் நடிப்பார் என்ற லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்