- Advertisement -
Homeபொழுதுபோக்குபட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சது, வடிவேலு டயலாக் போல படங்களை மாற்றிக்கொண்ட தயாரிப்பு...

பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சது, வடிவேலு டயலாக் போல படங்களை மாற்றிக்கொண்ட தயாரிப்பு நிறுவனங்கள் – அட இதுகூட நல்லாதாம்பா இருக்கு!

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான நடிகர் விஜய் படம் தி கோட். தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற இந்த படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சுதீப், ரம்யா கிருஷ்ணன், லைலா உள்ளிட்ட முக்கிய நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியான நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி, தி கோட் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. மங்காத்தா, மாநாடு போன்ற படங்களை கொடுத்த வெங்கட்பிரபு, இந்த படத்தில் வேற லெவலில் விஜயை வைத்து மாஸ் காட்டியிருப்பார் என்றும் நம்பப்படுகிறது. நாளுக்கு நாள் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி வருகிறது.

- Advertisement -

அதே போல், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய அளவில் இந்திய சினிமா ரசிகர்களிடம் வைப் ஏற்படுத்திய படம் புஷ்பா. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், செம்மரக் கடத்தல் கதையை பின்னணியாக கொண்டது. தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார்.

இதில், ஊ சொல்றியா மாமா என்ற ஐயிட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு, ரசிகர்களை துள்ள வைத்தவர் நடிகை சமந்தா. இந்த பாடலை, ஆண்ட்ரியா பாடியிருந்தார். மேலும் இந்த படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளும், குறிப்பாக அல்லு அர்ஜூனின் நடிப்பும் தரமான சம்பவமாக இருந்தது. அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது.

- Advertisement -

இந்நிலையில், தி கோட் படத்தின் தெலுங்கு உரிமத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் 15 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதில் குபேரா தயாரிப்பாளரும் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதே போல், புஷ்பா 2 படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமத்தை தி கோட் படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

அதாவது, பண்டமாற்று முறை போல குறிப்பிட்ட விலைகளில் தி கோட் படத்தை தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், புஷ்பா 2 படத்தை ஏஜிஎஸ் நிறுவனமும் மாற்றிக்கொண்டுள்ளது. இது, கிரி படத்தில் பேக்கரியை நீ வெச்சுக்க, என்ற வடிவேலு காமெடி போல இருப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டலடித்தாலும், இப்படி நல்ல படங்களை, பெரிய படங்களை இப்படி கூட அனுசரித்து ஒருவருக்கு ஒருவர் மாற்றிக்கொள்வது நல்ல விஷயம்தான் என்று பாராட்டவும் செய்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்