நடிகர் விஷால் கடந்த பல ஆண்டுகளாக, தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டைரக்டர் இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இப்போது டைரக்டர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்தினம் படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், நான் 2026 ஆம் ஆண்டில் நேரடியாக அரசியலுக்கு வரப் போகிறேன். அப்போது நடக்கும் சட்டசபை தேர்தலில், கண்டிப்பாக வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இருக்கும் என்று கூறினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் இந்த சூழ்நிலையில், இப்போது நடிகர் விஷாலும் அரசியல் வருவதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் சினிமாவில் விஜய்க்கு இருக்கும் மாஸ், கெத்து, அவருக்கு இருக்கிற வரவேற்பில் விஷாலுக்கு உண்மையில் 10 சதவீதம் கூட தமிழக ரசிகர்கள் மத்தியில் கிடையாது என்பதுதான் இதில் கசப்பான உண்மை. விஷாலுக்கே ஓட்டு போடாத மக்கள் அவர் கட்சி தொடங்கினால், யார் அவருக்கு வெற்றி வாய்ப்பைத் தர போகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் விஷால் நடிக்கும் ரத்னம் படம் திரைக்கு வர உள்ள நிலையில், அந்தப் படத்துக்கு போட்டியாக சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் தான் மறைமுகமாக வெளியிடுகிறது. இந்த படத்தை விஷால் நடித்த ரத்னம் படத்துக்கு போட்டியாக களத்தில் இறக்குகிறது. குறிப்பாக ரத்னம் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்பதற்காகவே, அரண்மனை 4 படத்தை, களத்தில் இறக்கி இருப்பதாக ஒரு தகவல் பரவி விடுகிறது.
இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கும், தனக்கும் இருக்கும் பிரச்னை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். விஷால் கூறுகையில், அந்த நிறுவனத்தில் இருக்கும் குறிப்பிட்ட நபருடன், எனக்கு பிரச்சனை இருக்கிறது. ஒரு படத்தை தள்ளி போட வேண்டும், ஒரு படம் ரிலீஸ் செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.
வட்டிக்கு கடன் வாங்கி, வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி ஒரு படம் எடுத்தால் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடுங்கள் என்று சொல்ல நீங்கள் யார். நீங்கள் தான் சினிமாவை குத்தகைக்கு எடுத்துள்ளீர்களா. ஒருவரை நான்தான் உதயநிதி ஸ்டாலினிடம் சேர்த்து விட்டேன். அவரே இந்த மாதிரி செய்வது என்னால் ஏற்க முடியவில்லை. சினிமாவை யாரும் உரிமை கொண்டாட முடியாது. சினிமா என் கையில் இருக்கு என்று சொல்லுகிற யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது என்று கோபமாக பேசியுள்ளார் நடிகர் விஷால். இதன்மூலம் நடிகர் விஷாலுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே உள்ள பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.





