- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் நடிக்க இனிமேல் இது கட்டாயம்; 20ம் தேதி வரை கால அவகாசம் -...

தமிழ் சினிமாவில் நடிக்க இனிமேல் இது கட்டாயம்; 20ம் தேதி வரை கால அவகாசம் – நடிகர் விஷால் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக நடிகர் விஷால் நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான மார்க் ஆண்டனி படம் மட்டுமே பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார்.

ஆனால் இந்த படத்தின் பெரிய வெற்றிக்கு வில்லன் கேரக்டரில் நடித்த நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யாவின் நடிப்புதான் முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன்பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படமும் சரியாக போகவில்லை. அதன்பிறகு துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கும் முயற்சிகளை மேற்கொண்ட நடிகர் விஷால், தயாரிப்பாளர் கிடைக்காமல் அதையும் கிடப்பில் போட்டு விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பு விழா நடிகர் சங்கம் திறப்பு விழா மிக பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகா ஆகியோர் திருமணம் நடிகர் சங்க மண்டபத்தில் நடக்க உள்ளது. அன்று நடிகர் விஷாலின் 48வது பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திரைப்பட துறை சார்ந்த அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதே போல் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

- Advertisement -

இனிவரும் காலங்களில் திரைப்படங்களில் கேமரா முன் நின்று நடிக்கும் நடிகர் நடிகைகள், துணை நடிகர் நடிகைகள் என அனைவருமே நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெற்றவராகத் தான் இருக்க வேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தொழில்முறை ஆயுள் உறுப்பினராக சேர்வதற்கு சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள உறுப்பினர்களின் மருத்துவம் கல்வி மற்றும் இதர உதவிகளுக்கும் ஈமச்சடங்குகளுக்கும் செலவிடப்பட்டு வருகிறது.

இதுவரை நடிகர் சங்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நடித்துக் கொண்டிருப்பவர்களிடம் அதன் பயனை எடுத்துக் கூறி வருகிற 20ம் தேதிக்குள் உறுப்பினர் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நடிகர் நடிகைகளின் மேலாளர்கள், தயாரிப்பு நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்