- Advertisement -
Homeபொழுதுபோக்கு"பஞ்சு மிட்டாய் சேலை கட்டி"... விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் எப்படி இருக்கு... ட்விட்டர் விமர்சனம்...

“பஞ்சு மிட்டாய் சேலை கட்டி”… விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் எப்படி இருக்கு… ட்விட்டர் விமர்சனம் இதோ…

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக ஒரு வெற்றியைக் கூட கொடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார் நடிகர் விஷால். அவர் நடிப்பில் வெளியான, அயோக்யா, ஆக்சன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி ஆகிய திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.

இது ஒரு பக்கம் இருக்க, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் தவியாய் தவித்து வந்தார். திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், முதல் திரைப்படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டார். அடல்ட் காமெடி ரகத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், சர்ச்சைக்கு உள்ளானாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதன்பிறகு, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்னும் ஒரு படத்தை எடுத்து மீள முடியாமல் தவித்தார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த நிலையில் தான், நடிகர் விஷாலுக்கும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் மிக முக்கிய திரைப்படமாக மார்க் ஆண்டனி வெளியாகியுள்ளது.

டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கேங்ஸ்டர்னா ஒரு டிசிப்ளின் வேணும் என எஸ் ஜே சூர்யா பேசும் பஞ்சு வசனங்கள் அலப்பறையை கொடுத்தன.

இதுபோக சில்க் ஸ்மிதா வரும் காட்சி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலும் பக்காவாக இருந்ததால் படத்திற்கு செல்ல ரசிகர்கள் தயாராகினர். இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

படத்திற்க்கே அச்சாரமாய் எஸ் ஜே சூர்யா இருப்பதாகவும், அவரது நடிப்பு வேற லெவலில் உள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். முதல் பாதி சராசரியாக இருக்கும் நிலையில், இரண்டாம் பாதி படுஜோராக நகர்வதாகவும், இடைவெளி காட்சி கலகலப்பூட்டும் வகையில் உள்ளதாகவும் பலர் கூறி வருகின்றனர். சில்க் ஸ்மிதா காட்சிகளும், தொலைபேசியில் உரையாடும் காட்சிகளும் கிளிக் ஆகி இருப்பதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில், மார்க் ஆண்டனி திரைப்படம் பாஸாகி விட்டதாகவும், நல்ல ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

சற்று முன்