தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விக்ரம். ஆனால் இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நெஞ்சமல்ல. தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக அவர் 1990 களிலேயே இந்தத் துறைக்கு வந்து விட்டார்.
இருப்பினும் விக்ரம் வெளிச்சத்திற்கு தெரிய ஆரம்பித்தது 2000 வருடங்கள்தான். முதலில் 1988 ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலாட்டா குடும்பம் என்னும் சீரியல் தான் விக்ரம் அறிமுகமானார். இப்படி சின்னத்திரையில் தோன்றிய விக்ரமுக்கு, பட வாய்ப்புகள் என்பது அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை.
1990களில் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் கலந்து கட்டி விக்ரமுக்கு உருப்படியான ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. காவல் கீதம், மீரா, புதிய மன்னர்கள் என விக்ரம் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வி அடைந்தன. இடையே அஜித்துடன் இணைந்து உல்லாசம் திரைப்படத்தின் விக்ரம் நடித்தார்.
இப்படியாக விக்ரமின் திரையுலக பயணம் அமைய அதில் மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது சேது திரைப்படம். இயக்குனர் பாலாவின் முதல் திரைப்படமான அதில் விக்ரமின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அவரது திரையுலக பயணத்தை புரட்டி போட்ட சேது திரைப்படத்தின் மூலம் வெற்றி முகட்டிற்கு நடிகர் சென்றார்.
தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அருள், அந்நியன், ராவணன், தெய்வத்திருமகள் என விக்ரம் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் அவரை புகழின் எல்லைக்கு கொண்டு சென்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு வெற்றி திரைப்படம் கூட கொடுக்காமல் தவித்து வந்த அவர், தங்கலான் திரைப்படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் ஆரம்பகாலத்தில் பம்பாய் திரைப்படம் தனக்கு தான் வந்ததாக விக்ரம் கூறியிருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதலில் இந்த திரைப்படத்தில் நடிக்க விக்ரமுக்கு தான் அழைப்பு வந்ததாம். ஆனால் அந்த சமயத்தில், புதிய மன்னர்கள் படத்திற்காக தாடி வளர்த்திருந்ததால் அதை எடுப்பதற்கு விக்ரம் மறுத்து விட்டாராம். இதனால் பட வாய்ப்பு அவரை விட்டுப் போய் இருக்கிறது. இதற்காக ரெண்டு மாதங்கள் கதறி அழுத்ததாக விக்ரம் கூறியுள்ளார்.





