தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் ஹீரோவாக அறிமுகமாக அவர் நடித்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. சமீபத்தில் அவர் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த குள்ளநரிக்கூட்டம் ராட்சசன் சிலுக்குவார்பட்டி சிங்கம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் இன்று நேற்று நாளை ஜீவா முண்டாசுப்பட்டி கதாநாயகன் நீர்ப்பறவை மாவீரன் கிட்டு பலே பாண்டியா காடன் கட்டா குஸ்தி துரோகி என பல படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவை.
இந்நிலையில் கட்டா குஸ்தி 2 படம் குறித்த பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, கட்டாகுஸ்தி 2 படத்தைத் தொடர்ந்து என்னுடைய நடிப்பில் அடுத்ததாக இரண்டு வானம் என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமம் ஏற்கனவே நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் நான் நடிக்க உள்ளேன். இதையடுத்து நான் நடிக்க இருக்கும் திரைப்படம் என்னுடைய திரைப் பயணத்தின் மிக முக்கியமான 25வது படமாக அமையும். இதற்காக ஒரு சிறந்த கதை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். கட்டாகுஸ்தி முதல் பாகத்திற்காக 5 நாட்கள் மட்டுமே மல்யுத்த பயிற்சி பெற்றேன்.
ஆனால் இந்த 2ம் பாகத்திற்காக 20 நாட்கள் கட்டாகுஸ்தி தீவிர பயிற்சி மேற்கொண்டு நடித்தேன். முதல் பாகம் பெண்களைப் பற்றியதாக இருந்த நிலையில் இரண்டாம் பாகம் ஹவுஸ் ஹஸ்பெண்ட் எனப்படும் வீட்டு வேலைகளை கவனிக்கும் கணவன்மார்களை பற்றியது. அவர்களது வாழ்க்கை உறவுமுறைகள் குடும்ப வாழ்க்கை அதைச் சுற்றியுள்ள சமூக பார்வைகளை பேசும் பக்கா காமெடி மற்றும் எமோஷனல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
கணவன் மனைவிக்குள் இருக்கும் குடும்ப பிரச்சினைகளை மையமாக வைத்து கட்டாகுஸ்தி 3 படம் எடுப்பதற்கான யோசனையும் இப்போதே தயார் நிலையில் உள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் ராட்சசன் மற்றும் எஃப்ஐஆர் ஆகிய படங்களை பார்த்துவிட்டு என்னை பெரிதும் பாராட்டியுள்ளார். எதிர்காலத்தில் நானும் அவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.





