- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி, விஜய் வரிசையில் நற்பணி மன்றத்தை தொடங்கிய விஷ்ணு விஷால்... விளையாட்டு வீரர்களுக்கென தனி திட்டம்...

ரஜினி, விஜய் வரிசையில் நற்பணி மன்றத்தை தொடங்கிய விஷ்ணு விஷால்… விளையாட்டு வீரர்களுக்கென தனி திட்டம் வேற இருக்காம்… அடுத்து அரசியல் என்ட்ரிதான் போல!…

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டத்தக்க சில வெற்றி படங்களைக் கொடுத்து,அதன் மூலம் படிப்படியாய் உயர்வு பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவர் அறிமுகமானார். இயக்குனர் சுசீந்திரனுக்கு முதல் திரைப்படமாக அமைந்த வெண்ணிலா கபடி குழு, ரிலீஸ் ஆன ஒரு வாரத்திற்கு பிறகு மெல்ல மெல்ல ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. கிராமத்துப் பின்னணியுடன், கபடி விளையாட்டை மையமாக வைத்து சாதிய வெறியையும் உரசிப் பார்த்த இந்த திரைப்படம் கோலிவுட்டில் முக்கிய திரைப்படமாக அமைந்தது. அதிலும் விளையாட்டுக் களத்திலேயே நாயகன் இறப்பது போல் அமைக்கப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியை, மனதை உலுக்கும் வகையில் எடுத்திருப்பார் சுசீந்திரன்.

இப்படி முதல் படத்திலேயே நல்ல பெயரை பெற்ற விஷ்ணு விஷால், அடுத்ததாக பலே பாண்டியா, துரோகி ஆகிய படங்களில் நடித்தார். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த வெற்றி இயக்குனர் சுதா கொங்கராவின் முதல் திரைப்படம்தான் துரோகி. அன்றைய தேதியில் அந்தப் படம் வெளியாகி தோல்வியை தழுவியதால், விஷ்ணு விஷால் அடுத்த வெற்றியைக் கொடுக்க போராடினார்.

இதன் பிறகு கதையை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருந்த நடிகர்,ஆண்டுக்கு ஒரு படத்தை கொடுத்தாலும் அது வெற்றியாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். நடிகரின் முயற்சிக்கு ஏதுவான படங்களும் அமைந்ததால் அடுத்தடுத்த வருடங்களில் பெரிதாக பேசப்பட்டார் நடிகர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா என விஷ்ணு விஷால் நடித்த அத்தனை படங்களும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டன.

2015ல் வெளியான இன்று நேற்று நாளை திரைப்படம் நடிகர் விஷ்ணு விஷாலின் வெற்றிப்பட வரிசையில் அமைந்தது. புதுமுக இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் வித்தியாசமாக டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு வெளியானது. திரையரங்குகளில் புதிய அனுபவம் கிடைத்ததால் இந்த படத்திற்கு பச்சைக்கொடி காட்டிய ரசிகர்கள், நல்ல வரவேற்பை கொடுத்தனர். பின்னர் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால், அந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார்.

2018 ஆம் ஆண்டு முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் உடன் மீண்டும் இணைந்து அவர் நடித்த படம்தான் ராட்சசன்.தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக முக்கியமான கிரைம் த்ரில்லர் படம் என்று ராட்சசனை கூறலாம். இன்றளவும் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை ராட்சஸுடன் ஒப்பிட்டுதான் மக்கள் கருத்து கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு படம் முழுவதும் ரசிகர்களை சீட்டின் இருக்கை நுனியில் உட்கார வைத்த இயக்குனர் ராம்குமார், சிறப்பான திரைக்கதையை கொடுத்து சபாஷ் போட வைத்தார். இதன் பிறகு விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர், கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றன. தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக ராம்குமார் உடன் ஒரு படம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் மற்றும் ஆரியன் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாளில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடிய அவரது ரசிகர்கள், நற்பணி மன்றத்தையும் தொடங்கினர். இது குறித்து பேசி இருக்கும் நடிகர், தனது ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளை செய்து வருவதால், விஷ்ணு விஷால் நற்பணி மன்றத்தை தொடங்கி இருப்பதாகவும், தான் விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவன் என்பதால் விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தை தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார். சமீபத்தில் விஜய் பல்வேறு நற்பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், விஷ்ணு விஷாலும் அதனையே பின்பற்றுவதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

சற்று முன்