- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் கோகுலுடன் ஏற்பட்ட பஞ்சாயத்து, படப்பிடிப்பை நிறுத்திய விஷால் விஷ்ணு, அவர் நடிக்கும் ...

இயக்குனர் கோகுலுடன் ஏற்பட்ட பஞ்சாயத்து, படப்பிடிப்பை நிறுத்திய விஷால் விஷ்ணு, அவர் நடிக்கும் படத்தை அடுத்து இயக்கப் போகும் டைரக்டர் யார் தெரியுமா? – லேபிள் வெப் சீரிஸ்ல இவர் கலக்கினாரே…

- Advertisement -

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிக் குழு என்ற படத்தில், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் விஷ்ணு விஷால் பிரபலமானார். அடுத்து விஷ்ணு விஷால் நடித்த குள்ளநரிக் கூட்டம் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

இதைத் தொடர்ந்து ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷாலின் ஆக்‌ஷன் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல் முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சிலுக்குவார் பட்டி சிங்கம், நேற்று இன்று நேற்று, கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் விஷ்ணு விஷால் சிறப்பாக நடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் இரட்டை நாயகர்களாக நடிகர் விக்ராந்த் உடன் விஷ்ணு விஷாலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்தார்.

இந்நிலையில் டைரக்டர் கோகுலுக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் கடும் வெறுப்படைந்த இயக்குனர் கோகுல் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதன் பிறகு இந்த படத்தை யார் இயக்குவது என்பதில் சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று தெரிய வந்துள்ளது.

அருண்ராஜா காமராஜ் தமிழ் சினிமா துறையில் வளர்ந்து வரும் கலைஞராக இருக்கிறார். காமெடி நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தெறி, பென்சில், கபாலி மற்றும் ஜிகர்தண்டா, ஜெயிலர், கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடலாசிரியராக பணியாற்றி பலரது பாராட்டைப் பெற்றவர். சிறந்த பாடலாசிரியர் பிலிம்பேர் விருது பெற்றவர்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளிவந்த லேபிள் வெப் சீரிஸ் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது அருண் காமராஜ், விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தை இயக்குவது முடிவாகி உள்ளது. அவருக்காக அலுவலகம் அமைத்து தரப்பட்டு, நடிகர்கள் தேர்வு மற்றும் கதை டிஸ்கஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2025ம் ஆண்டில் பொங்கலுக்கு பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்