நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கப்போகும் கட்சிகள் INDIA ( The Indian National Developmental Inclusive Alliance) என்ற கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இதனையடுத்து ஒரு நாட்டின் பெயரை எப்படி தேர்தல் கூட்டணிக்கு வைக்கலாம் என பாஜகவினரும், அந்தக் கட்சியின் ஆதரவாளர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இருப்பினும் எதிர்க்கட்சிகள் அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தங்களது கூட்டணியை INDIA என்று அழைப்பதையே தொடர்ந்தன. இதன் காரணமாக INDIA என்ற வார்த்தையை பாஜக தவிர்த்தது. இப்படிப்பட்ட சூழலில் ஜி20 உச்சி மாநாட்டு அழைப்பிதழில் President of INDIA என்று அச்சிடப்படுவதற்கு பதிலாக President of Bharat என்று அச்சிடப்பட்டிருக்கிறது.
இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி நடைபெறவிருக்கும் மக்களவை கூட்டத்தொடரில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என மாற்றுவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாநிலத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தங்களது கடும் ஆட்சேபனையை தெரிவித்துவருகின்றனர்.
சூழல் இப்படி இருக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும்படி இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நம்புபவன் நான். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத் என்பதை திரும்ப பெற நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்த உலகக்கோப்பையில் நமது வீரர்கள் பாரத்தை நெஞ்சில் ஏந்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பிசிசிஐ மற்றும் ஜெய் ஷாவிடம் வலியுறுத்துகிறேன்” என ட்வீட் செய்திருந்தார்.
Sir with due respect…
The name INDIA didn instill pride in you all these years?? https://t.co/ibm68uZ7e8
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) September 5, 2023
அதற்கு சேவாக்கின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்து விஷ்ணு விஷால், “ஏன் இத்தனை ஆண்டு காலம் இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா” என கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் மற்றொரு ட்வீட்டில், “நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு உதவும். இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது.
Thinking deep from this shoot location…
Wat ??????
name change ????
But why?????How does this help our country’s progress and its economy?
This is the strangest news ive come accross in recent times…India was always bharat…
We always knew our country as INDIA AND… pic.twitter.com/4X6Y8XbrL6— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) September 5, 2023
நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும்தான் அறிவோம். ஏன் திடீரென இப்போது மட்டும் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்” என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.





